அறம் வெல்லும்: திடீரென ஒன்றுகூடிய பிக் பாஸ் பிரபலங்கள்... விக்ரமன் கொடுத்த அப்டேட்!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் சீரியல் நடிகர் அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டார்.
ஆனால், விக்ரமன் தான் பிக் பாஸ் சீசன் 6ல் ரியல் வின்னர் என அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக்குடன் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வந்தனர்.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6ன் வெற்றிக் கொண்டாட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து தற்போது பிக் பாஸ் பிரபலங்கள் விக்ரமன், ஷிவின், ராம், ஏடிகே, அசல் கோளாறு, ரச்சிதா, ஷெரினா ஆகியோர் திடீரென ஒன்றுகூடி ரசிகர்களுக்கு சப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

அறம் வெல்லும் விக்ரமன்
கடந்தாண்டு அக்டோபர் 9ம் தேதி தொடங்கிய பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி ஜனவரி 22ம் தேதியோடு முடிவுக்கு வந்தது. 21 போட்டியாளர்களுடன் தொடங்கிய இந்த சீசனில் ஷிவின், விக்ரமன், அசீம் மூவர் மட்டுமே இறுதிப் போட்டிக்கான மேடையில் ஏறினர். முதல் ஆளாக ஷிவின் வெளியேற்றப்பட அசீம் - விக்ரமன் இவர்களில் யார் டைட்டில் வின்னர் என்ற போட்டி வந்தது. இறுதியாக அசீம்தான் வெற்றியாளர் என அறிவித்தார் கமல். இதனையடுத்து விஜய் டிவிக்கு எதிராக நெட்டிசன்கள் ட்ரோல் செய்தனர்.

பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டம்
ஒருபக்கம் அசீம்க்கு எதிராக அபியூசர் அசீம் என்ற ஹேஷ் டேக்கும், இன்னொரு சைடில் விக்ரமனுக்கு ஆதரவாக அறம் வெல்லும் ஹேஷ் டேக்கும் ட்ரெண்டானது. இதுதவிர போட்டியாளர்கள் பலரும் பிரபல யூடியூப் சேனல்களுக்கு பேட்டிக் கொடுத்து அங்கேயும் சில சர்ச்சைகள் கிளம்பின. இந்த பரபரப்புக்கு நடுவே பிக் பாஸ் வெற்றிக் கொண்டாட்டத்தையும் நடத்தி முடித்தது விஜய் டிவி. அப்போது விக்ரமனுக்கு ஆதரவாக பலரும் குரல் எழுப்பியதை ப்ரோமோ வீடியோக்களில் பார்க்க முடிந்தது.

ஒன்றுகூடிய பிக் பாஸ் பிரபலங்கள்
முன்னதாக பிக் பாஸ் வீட்டுக்குள் இருந்த போது, விரைவில் சட்ட உதவி மையம் தொடங்க வேண்டும் என்பதே எனது ஆசை என விக்ரமன் கூறியிருந்தார். அதற்கு ஹவுஸ்மேட்ஸ் பலரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். பிக் பாஸ் இறுதிப்போட்டி மேடையிலும் டைட்டில் வெல்லவில்லை என்றாலும் விரைவில் சட்ட உதவி மையம் தொடங்கப்படும் என உறுதியாகக் கூறியிருந்தார். தற்போது அதனை உறுதி செய்யும்விதமாக அப்டேட் கொடுத்துள்ளார் விக்ரமன். அதற்காக பிக் பாஸ் பிரபலங்கள் ஒன்றுகூடியதாக தெரிகிறது.

விக்ரமனுக்காக திரண்ட பலமான கூட்டணி
ராம் வீட்டில் விக்ரமன், ஏடிகே, அசல் கோளாறு, ஷெரினா, மகேஸ்வரி, ரச்சிதா, ஷிவின் ஆகியோர் ஒன்றுகூடிய போட்டோ வைரலாகி வருகிறது. அசீம், மணிகண்டன், தனா, ஜிபி முத்து, சாந்தி, ஆயிஷா, ராபர்ட் மாஸ்டர் போன்றவர்கள் இதில் இல்லை. விக்ரமனுக்கு ஆதரவாக பிக் பாஸ் வீட்டில் குரல் கொடுத்தவர்கள், அவரின் லட்சியத்துக்காக வெளியே வந்தும் தோள் கொடுக்கின்றனர் என நெட்டிசன்கள் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர்.

விரைவில் சட்ட உதவி மையம்
இந்த சந்திப்புக்கு பின்னர் விக்ரமன் வெளியிட்ட வீடியோவில், ஒரு முக்கியமான ப்ராஜக்ட்காக நாங்கள் மீண்டும் சந்தித்தோம். அந்த வேலை முடிந்துவிட்டது, அதற்கான மற்ற பணிகளையும் சீக்கிரம் முடித்துவிட்டு அப்டேட் தருவதாகக் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் விக்ரமனின் லட்சியமான அறம் வெல்லும் என்ற சட்ட உதவி மையம் தொடங்கப்படும் என தெரிகிறது. விக்ரமனின் வீடியோ வெளியானதில் இருந்து அறம் வெல்லும் என்ற ஹேஷ்டேக் மீண்டும் ட்ரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











