சிங்கம் 2, தலைவாவை பீட் பண்ணிய அஜீத்தின் ஆரம்பம்
சென்னை: கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கான அஜீத்தின் ஆரம்பம் படத்தின் தியேட்டர் உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளதாம்.
அஜீத்தின் ஆரம்பம் படத்தின் ஷூட்டிங் துவங்கிய நாளில் இருந்து அது பற்றி ஏதாவது ஒரு செய்தி வந்து கொண்டு தான் இருக்கிறது. படத்திற்கு பல காலம் தலைப்பு வைக்காமல் இருந்ததால் அதுவே பெரிய செய்தியாக இருந்தது.
தற்போது படத்தின் இசை வெளியீடு, ரிலீஸ் எப்பொழுது என்று அஜீத் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சோலோ ரிலீஸ்
ஆரம்பம் படம் தீபாவளிக்கு வராதாம். மாறாக சோலோவாக ரிலீஸ் செய்து வெற்றி காணப் போகிறார்களாம்.

தியேட்டர் உரிமை
கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கான ஆரம்பம் படத்தின் தியேட்டர் உரிமையை காஸ்மோ பிக்சர்ஸ் பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளதாம்.

தலைவா, சிங்கம் 2
இந்த 4 பகுதிகளுக்கான தலைவா, சிங்கம் 2 ஆகிய படங்களின் தியேட்டர் உரிமை கூட ஆரம்பம் அளவுக்கு செல்லவில்லையாம்.

எந்திரன் மட்டுமே
கோவை, திருப்பூர், ஊட்டி மற்றும் ஈரோடு பகுதிகளுக்கான எந்திரன் பட தியேட்டர் உரிமை தான் அதிக விலைக்கு சென்றுள்ளது. அதையடுத்து தற்போது அஜீத்தின் படம் சென்றுள்ளது.

கெரியரிலேயே
அஜீத்தின் திரையுலக பயணத்திலேயே ஆரம்பம் படத்தின் தியேட்டர் உரிமை தான் அதிக விலைக்கு சென்றுள்ளதாம்.


Click it and Unblock the Notifications











