ஆரம்பிச்சிட்டோம்.... இனி முடிக்காம ஓய மாட்டோம்... ட்ரெண்ட்டான விக்ரம் படத்தின் ஹேஷ்டாக்
சென்னை : உலகநாயகனின் நடிப்பில் விக்ரம் படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கவுள்ளது.
படத்தின் பர்ஸ்ட் லுக் இன்று மாலை வெளியிடப்பட்டது. கமல் இளைஞர்கள்மீது நம்பிக்கை உள்ளதாக ட்வீட் செய்து இதை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடும் அனைவரும் ஆரம்பிச்சுட்டோம் என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தியுள்ளனர்.

விக்ரம் படம்
உலக நாயகன் கமல் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையை விட்டு ஒதுங்கியிருந்த நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடிக்கவுள்ளார். படத்தின் நடிகர், நடிகைகள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

அன்பறிவ் ஸ்டண்ட்
முதல்கட்டமாக விஜய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜூன் தாஸ் மற்றும் நரேன் ஆகியோர் படத்தில் உறுதி செய்யப்பட்டுள்ளனர். மேலும் படத்தின் இசையை அனிருத்தும் ஸ்டண்டை அன்பறிவ்வும் மேற்கொள்ளவுள்ளனர். ஒவ்வொரு விஷயத்தையும் சிறப்பாக லோகேஷ் தேர்வு செய்து வருகிறார்.

படக்குழு அதிரடி
மேலும் மற்றொரு நடிகர் ஒருவரும் கமலுக்கு வில்லனாக உள்ளதாக லோகேஷ் கனகராஜ் அப்டேட் செய்திருந்தார். இந்நிலையில் படத்தின் முதல்கட்ட பணிகள் முடிவதற்கு முன்னதாகவே பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டு படக்குழுவினர் அதிரடி கிளப்பியுள்ளனர்.

ட்விட்டரில் ட்ரெண்டிங்
இன்று மாலை படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில், ஆரம்பிச்சுட்டோம் என்ற ஹேஷ்டாக் ட்ரெண்டாகி வருகிறது. இதன்மூலம், படத்தின் சூட்டிங் விரைவில் துவங்கி ஜரூராக நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம். மேலும் ஆரம்பிச்சுட்டோம் என்ற இந்த வாசகம் ரசிகர்களுக்கு மேலும் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


Click it and Unblock the Notifications











