»   »  அறம் 2 கன்ஃபர்ம்... 'தலைவி'யை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள் போல!

அறம் 2 கன்ஃபர்ம்... 'தலைவி'யை முதல்வராக்காமல் ஓயமாட்டார்கள் போல!

Posted By:
Subscribe to Oneindia Tamil

அறம் படத்தின் க்ளைமாக்ஸில், கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு நயன்தாரா வெளியில் வருவார். பின்னணியில், "என் மதிவதனியாகிய நான், மக்கள் அனைவருக்கும், நேர்மையானதை செய்வேன்...", என குரல் ஒலிக்கும்.

அதாவது பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களிடம் போகும் நயன்தாராவுக்கு மக்கள் அதிகாரம் தருவார்கள். அவர் முதல்வராக மக்களுக்கு நல்லது செய்வார் என்று சொல்ல வருகிறார்கள்.

Aramm 2 confirmed

இப்போது அதை மையப்படுத்தி அறம் படத்தின் 2வது பாகத்தை உருவாக்கப் போகிறார்களாம். இந்தப் படத்தையும் கோபி நயினார்தான் இயக்கப் போவதாகக் கூறப்படுகிறது. காட்சிகள் அனைத்தும் மிகைப்படுத்தல் இல்லாமல், மக்களை எரிச்சலூட்டுவதுபோல இல்லாமல் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறாராம் நயன்தாரா.

இதற்கிடையில் கோபி நயினாருக்கு வெளியிலிருந்து ஏகப்பட்ட ஆஃபர்களாம். அதுவும் போனை எடுக்க முடியாத அளவுக்கு. யார் போன் பண்ணாலும் அவர் பிஸியாக இருப்பதாக பதில் வருகிறது.

எத்தனை பெரிய வாய்ப்புகள் வந்தாலும், முன்னுரிமை நயன்தாரா படத்துக்குத்தானாம்!

English summary
Nayanthara - Gopi Nayinar are teaming up again for Aram part 2

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X