»   »  அம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2!

அம்பேத்கரின் அரசியல் பேசும் அறம் 2!

Posted By:
Subscribe to Oneindia Tamil
நயன்தாரா அடுத்த படம் அறம் 2!

நயன்தாரா நடிப்பில் கோபி நயினார் இயக்கத்தில் உருவாகி பெரும் வெற்றிப் பெற்ற அறம் படத்தின் இரண்டாம் பாகம் வரும் செப்டம்பரில் தொடங்குகிறது.

இந்தப் படத்திலும் நயன்தாராதான் நடிக்கிறார். அறம் படத்தைத் தயாரித்த அதே கோட்டப்பாடி ராஜேஷ்தான் இந்தப் படத்தையும் தயாரிக்கிறார்.

Aramm 2 to start from September

மக்கள் பணியை சரியாகச் செய்ய முடியாத மாவட்ட கலெக்டர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மக்களைச் சந்திக்க நயன்தாரா புறப்படுவது போல முதல் பாகத்தை முடித்திருந்தார் இயக்குநர் கோபி.

இந்த இரண்டாம் பாகத்தில் தமிழகத்தில் நிலவும் சாதிக் கொடுமைகள், மத ரீதியிலான வன்முறைகளுக்கு எதிரான காட்சிகள் அதிகமிருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. மக்கள் வழங்கும் அதிகாரத்தை வைத்து இந்த கொடுமைகளை எப்படி நயன்தாரா ஒழிக்கிறார் என்பதுதான் கதை என்கிறார்கள். அம்பேத்கரின் அரசியலை வலிமையாக ஒலிக்கும் படமாக அறம் 2 உருவாகிறது.

ஆனால் இந்தப் படத்தை உருவாக்குவதற்கு முன் குறுகிய காலப் படம் ஒன்றை கோபி நயினார் உருவாக்கப் போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

English summary
Gopi Nayinar is gearing up to make the sequel for his successful Aramm movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X