'அறம்' படம் எப்படி?: அய்யோ அதை ஏன் கேட்கிறீங்க, நயன்....-ட்விட்டர் விமர்சனம் #Aramm
சென்னை: அறம் படத்தை பார்த்தவர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கோபி நயினார் இயக்கத்தில் நயன்தாரா மாவட்ட கலெக்டர் மதிவதனியாக நடித்த அறம் படம் இன்று ரிலீஸாகியுள்ளது. படத்திற்கு கிப்ரான் இசையமைத்துள்ளார்.
படத்தை பார்த்தவர்கள் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளனர்.
கதை
கத்தி படக்கதை தன்னுடையது என்று அறம் இயக்குனர் கோபி முன்பு தெரிவித்தார். அறம் படத்தை பார்த்தால் அந்த உண்மை என புரிகிறது.
அறம்
அமெரிக்காவில் இந்த படத்தை வெளியிட்டதற்கு நன்றி. இந்த ஆண்டின் சிறந்த படம் #Aramm
துரைராஜ்
வில்லனுக்கு அடியாளாக நடித்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் துரைராஜ் க்கு அழுத்தமான கதாபாத்திரம். மனுஷன் தூள் கிளப்புறான். #Aramm
அருமை
#Aramm - 3.5 / 5
- லேடி சூப்பர் ஸ்டாரிடம் இருந்து அருமையான நடிப்பு
- சிறப்பான ஸ்க்ரிப்ட் 👏
- கோபியின் திறமையான இயக்கம்
- ஈர்க்கும் திரைக்கதை 👌
- சரியான பிஜிஎம் 👌
- திறம்பட எடுத்திருக்கிறார்கள் 👏
- அண்மையில் வந்த நல்ல படம் 💪
உண்மை
அறம் இடைவேளை- இதுவரை மிக நன்றாக உள்ளது. ஒரு கிராமத்தில் நடந்த உண்மை கதை. வசனங்கள் நன்றாக உள்ளது.
எக்சலென்ட்
எக்சலென்ட் படம் #Aramm அருமை. டோன்ட் மிஸ்


Click it and Unblock the Notifications











