பொண்ணுங்கள போட்டுத் தள்ளுறாரு.. 2 லாரி ரத்தம்.. லோகேஷ் கனகராஜ் மனநிலை விவகாரம்.. இயக்குநர் விளாசல்!
சென்னை: மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம் மற்றும் லியோ உள்ளிட்ட படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் இயக்குநராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜை மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த ராஜமுருகன் என்பவர் வழக்கு தொடுத்துள்ளது பெரிய பரபரப்பை கிளப்பி உள்ளது. இந்நிலையில், அதுதொடர்பாக அரணம் படத்தின் இயக்குநர் பிரியன் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியிருப்பது மேலும், சர்ச்சையை கிளப்பி உள்ளது.
விஜய் ஆண்டனி இசையில் வெளியான பல பாடல்களுக்கு லிரிக்ஸ் எழுதிய பாடலாசிரியர் பிரியன் ஹீரோவாகவும் இயக்குநராகவும் அறிமுகமாக உள்ள அரணம் படம் ஜனவரி 5ம் தேதியான நாளை வெளியாகிறது. சமீபத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், மேடை ஏறி பேசிய பிரியன் அமலா ஷாஜி அதிக சம்பளம் கேட்கிறார் என பேசியது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் பற்றி பேசியிருக்கிறார் பிரியன்.

பிரசாந்த் ரங்கசாமியெல்லாம் ஒரே ஆளே கிடையாது: 2003ம் ஆண்டு முதல் பாடல்களை எழுதி பிரபலமானவன் நான். பிரசாந்த் ரங்கசாமி எப்படி எல்லாம் விமர்சனம் பண்ணி, இப்போ படங்களில் எப்படியெல்லாம் நடித்து வருகிறார் என அனைத்துமே தெரியும். அவரையெல்லாம் ஒரு ஆளாகவே மதிக்க மாட்டேன். அமலா ஷாஜி விவகாரம் தொடர்பாக பிரியன் பேசியதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரசாந்த் ரங்கசாமி கண்டனம் தெரிவித்து ட்வீட் போட்டிருந்தார். அதற்கு எதுவும் பதில் சொல்லவில்லையே என செய்தியாளர்கள் கேட்டதற்கு இப்படியொரு அதிரடி பதிலை பிரியன் கூறியுள்ளார்.
கன்டென்ட் மட்டும் போதாது: சித்தார்த் சித்தாவை முட்டி மோதி புஷ் பண்ணி ஓட வைத்தார். அதே நிலைமை தான் போர் தொழில் படத்துக்கும் ஆனால், கிடா, வட்டார வழக்கு படங்கள் எல்லாம் நல்ல கன்டென்ட் இருந்தும் ஏன் ஓடவில்லை. அனைத்து நல்ல சிறு படங்களும் ஓடி விடாது. அதற்கு ஏதாவது ஒரு பிடிமானம் இருந்தால் தான் அது தப்பிக்கும் என பேசியுள்ளார்.
பொண்ணுங்களை எல்லாம் கொல்றாரு: லோகேஷ் கனகராஜை மனநல பரிசோதனை செய்ய வேண்டும் என மதுரையை சேர்ந்த நபர் ஒருவர் வழக்குத் தொடுத்துள்ளார். லோகேஷ் படங்களில் பொண்ணுங்களை கொன்னுடுவாரு, 2 லாரி ரத்தம் இப்படியெல்லாம் எடுத்தா அது நல்ல படமா? அதையெல்லாம் மக்கள் அதனால் தான் புறக்கணித்து விடுகின்றனர் என பிரியன் விளாசி உள்ளார்.


Click it and Unblock the Notifications











