»   »  உலக சாதனைக்காக 10 மணி நேரத்தில் 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’!

உலக சாதனைக்காக 10 மணி நேரத்தில் 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்’!

Posted By:
Subscribe to Oneindia Tamil

'புதுமையே உன் பேர் தான் தமிழ் சினிமாவோ...' என்பதைப் போல தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்துக்கு கொண்டு போகும் புதியவர்கள், இளையவர்கள் அதிகம் இப்போது வருகிறார்கள். அவர்களில் இயக்குநர் எம்.எஸ்.செல்வாவும் ஒருவர்.

இவர் இன்று 21.10.2016 அன்று ஒரு சாதனை நிகழ்த்தவிருக்கிறார். அதாவது பத்தே மணி நேரத்தில் ஒரு படத்தின் முழு படப்பிடிப்பையும் நடத்தி சாதனை புரியவிருக்கிறார்.

Arandavanukku Irundathellam Pei

இன்றைக்கு தமிழ் சினிமாவின் மினிமம் கேரண்டி சப்ஜெக்டான ஹாரர் காமெடிதான் படத்தின் களம். படத்தின் பெயர் 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்'.

ஒரு வீட்டுக்கு புதுமண தம்பதிகள் குடி வருகிறார்கள். கணவனுக்கு மனைவியை பிடிக்கவில்லை. எனவே பேய் நம்பிக்கையை வரவழைத்து விரட்ட சில நண்பர்களை அமர்த்துகிறான். திகிலுடன் முதல் பாதி சென்றுகொண்டிருக்கும்போதே இன்னொரு புதுமண தம்பதி தங்க இடம் கேட்டு வருகிறார்கள். அவர்களை மேலே தங்க வைக்கிறான் கணவன். இந்த நேரத்தில் அங்கிருக்கும் பேய்கள்தான் செட் பண்ணிய போலி பேய்கள் இல்லை... உண்மையான பேய்கள் என்று தெரிய வருகிறது. அதன் பின் அந்த உண்மை பேய்களிடம் மாட்டிக்கொண்டு இரு தம்பதிகளும் என்னென்ன பாடுபடுகிறார்கள் என்பதை இரண்டாம் பாதி முழுக்க வயிறு குலுங்க வைக்கும் காமெடியாக சொல்லவிருக்கிறது 'அரண்டவனுக்கு இருண்டதெல்லாம் பேய்' படம்.

இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய படப்பிடிப்பு மாலை 5 மணிக்கு முடிவடையவிருக்கிறது. கிட்டத்தட்ட இரண்டு மாத கடின உழைப்பினாலும், திட்டமிடலாலும் இந்த சாதனையை நிகழ்த்திக்கொண்டிருக்கிறது இயக்குநர் எம்.எஸ்.செல்வா தலைமையிலான படக்குழு.

இதற்கு முன்பு 24 மணி நேரத்தில் பல இயக்குநர்கள் சேர்ந்து எடுத்த சுயம்வரம் படம் தமிழில் குறைந்த நேரத்தில் எடுக்கப்பட்ட படமாக சாதனைப்பட்டியலில் நீடிக்கிறது. அதனை முறியடிப்பதோடு லிம்கா சாதனைப்பட்டியலிலும் இடம்பெறும் உத்வேகத்துடன் படப்பிடிப்பை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

மொத்தம் ஆறு கேமரா செட்டப், ஏற்கெனவே பயிற்சி தரப்பட்ட கலைஞர்கள் என முழுமையான திட்டமிடல் படத்தை நிச்சயம் சாதனைப் பட்டியலில் சேர்க்கும் என நம்பலாம். குறைந்த நேரத்தில் எடுக்கப்படும் படத்தில் மூன்று பாடல்களும் அடக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.

டாக்டர். பி.சரவணன், அனுகிருஷ்ணன், சிங்கம்புலி, குமரேசன், இயக்குநர் எம்.எஸ்.செல்வா, கிரேன் மனோகர், நெல்லை சிவா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஜெயக்குமார் தங்கவேலு ஒளிப்பதிவு செய்ய, ராஜா இசையமைக்கிறார்.

English summary
Debutant SM Selva is making a new movie titled Arandavanukku Irundathellam Pei movie with in 10 hours for world record.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil