பாக்ஸ் ஆபிஸ்: இறுதிச்சுற்று vs அரண்மனை 2 நிலவரம் எப்படி?

By Manjula

சென்னை: இந்த வாரம் வெளியான அரண்மனை 2 மற்றும் இறுதிச்சுற்று 2 படங்களுமே பாக்ஸ் ஆபீஸில் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கின்றன.

இதில் சுந்தர்.சியின் அரண்மனை 2 2016ம் ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் திரைப்படமாக மாறியிருக்கிறது. இதே போல குத்துச்சண்டையை அடிப்படையாக வைத்து வெளியான இறுதிச்சுற்று திரைப்படத்திற்கும் ரசிகர்கள் நல்லதொரு வரவேற்பை அளித்திருக்கின்றனர்.

இறுதிச்சுற்று மற்றும் அரண்மனை 2 படங்களின் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்களை இங்கே பார்க்கலாம்.

அரண்மனை 2

அரண்மனை 2

இந்த வருடத்தின் முதல் பேய்ப்படமாக வெளியான அரண்மனை 2 வில் இயக்குநர் சுந்தர் சியுடன் இணைந்து சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.2014 ம் வருடம் வெளியாகி வசூலைக் குவித்த அரண்மனை படத்தின் தொடர்ச்சியாக வெளியாகி இருக்கும் அரண்மனை 2வும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது.

மிகப்பெரிய ஓபனிங்

மிகப்பெரிய ஓபனிங்

கடந்த வாரம் வெளியான அரண்மனை 2 திரைப்படம் 2016 ம் ஆண்டின் மிகப்பெரிய ஓபனிங் திரைப்படமாக அமைந்திருக்கிறது. வெளியான முதல் நாளில் மட்டும் சுமார் 5.22 கோடிகளை இப்படம் வசூலித்திருக்கிறது. இதன் மூலம் எத்தனை தடைகள் வந்தாலும் அரண்மனை படத்தின் 3 வது பாகத்தையும் எடுத்தே தீருவேன் என்ற முடிவிற்கு வந்திருக்கிறார் சுந்தர்.சி.

இறுதிச்சுற்று

இறுதிச்சுற்று

மாதவன்,ரித்திகா சிங், நாசர் மற்றும் பலரது நடிப்பில் குத்துச்சண்டையை மையமாகக் கொண்டு வெளியாகியிருக்கும் மற்றொரு படம் இறுதிச்சுற்று. தமிழ், இந்தி என்று 2 மொழிகளில் வெளியாகி இருக்கும் இப்படம் 2 மொழி ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்றிருக்கிறது. மாதவன் தவிர வேறு பெரிய நடிகர்கள் இல்லாத போதும் எந்தவித சமரசமும் இல்லாத திரைக்கதையால் மாபெரும் வெற்றிப்படமாக மாறியிருக்கிறது.

வசூல் மழை

வசூல் மழை

தமிழ், இந்தி என்று 2 மொழிகளிலும் சேர்த்து இப்படம் 6 கோடிகளுக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக கூறுகின்றனர். வரும் நாட்களில் இப்படம் மேலும் வசூலில் பல்வேறு சாதனைகளைப் படைக்கும் என்பது விநியோகஸ்தர்களின் கருத்தாக உள்ளது.

துரோகி

துரோகி

துரோகி திரைப்படம் தோல்வியைக் கொடுத்த போதிலும் கூட காத்திருந்து இப்படத்தை எடுத்த இயக்குநர் சுதா இதன் மூலம் வெற்றி இயக்குநர்கள் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறார். இந்த வெற்றியின் மூலம் மேலும் பல நல்ல திரைப்படங்களை தமிழ் சினிமாவிற்கு கொண்டு வர சுதா வழி காட்டியிருக்கிறார் என்று சொன்னால் அது மிகையல்ல.

மொத்தத்தில் இறுதிச்சுற்று தமிழ் சினிமாவின் வெற்றிச்சுற்றாக மாறியிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X