»   »  அடேங்கப்பா.. அரண்மனை 2க்கு ஆயிரம் தியேட்டராமே!

அடேங்கப்பா.. அரண்மனை 2க்கு ஆயிரம் தியேட்டராமே!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி இருக்கும் அரண்மனை 2 படம் உலகம் முழுவதும் 1௦௦௦ திரையரங்குகளை வெளியாகவிருக்கிறது.

கடந்த 2014ம் ஆண்டில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பையும், வசூலையும் ஒருசேரக் குவித்த படம் அரண்மனை. அரண்மனை படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அதன் 2 வது பாகமாக அரண்மனை 2 படத்தை சுந்தர்.சி எடுத்திருக்கிறார்.


Aranmanai 2 Release more than 1000 Screens

இந்தப் படத்தில் சுந்தர் சியுடன் இணைந்து சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, பூனம் பஜ்வா, சூரி, கோவை சரளா மற்றும் மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.


தணிக்கைக் குழுவில் யூ சான்றிதழ் பெற்ற இப்படம் வருகின்ற 29 ம் தேதி உலகம் முழுவதும் சுமார் 1௦௦௦ திரையரங்குகளில் வெளியாகிறது


முதல் பாகத்தைப் போன்றே இந்தப் பாகத்தையும் காமெடியை சற்றுத் தூக்கலாக கலந்து இயக்குநர் சுந்தர்.சி உருவாக்கியிருக்கிறார்.


வழக்கம் போல பேய்ப்படங்களை வாங்கி வெளியிடும் ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம், இப்படத்தின் தமிழ்நாட்டு விநியோக உரிமையை கைப்பற்றியிருக்கிறது.


பொங்கலுக்கு இந்நிறுவனம் வாங்கி வெளியிட்ட கதகளி திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் அரண்மனை 2 படத்திற்கும் நல்ல வரவேற்பு கிடைக்கும் என்று இந்நிறுவனம் நம்பிக்கை கொண்டிருக்கிறது.


சுந்தர்.சியின் அரண்மனை 2 மாதவனின் இறுதிச்சுற்று படத்துடன் பாக்ஸ் ஆபீஸில் நேரடியாக மோதுகிறது. இந்த மோதலில் வெற்றிக்கனியை பறிக்கப் போவது யார்?பதில் இன்னும் 3 தினங்களில்!

English summary
Sundar.C's Aranmanai 2 will be Released on Coming 29th. Sources Said This Movie Released more than 1000 Screens for Worldwide.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil