ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட்.. சுந்தர்.சியின் 'அரண்மனை 3' படத்துக்காக பேய்த்தன ஆக்‌ஷன்!

By

சென்னை: அரண்மனை 3 படத்துக்கு ரூ.2 கோடி செலவில் பிரமாண்ட செட் அமைத்து சண்டைக்காட்சியை படமாக்கியுள்ளனர்.

சுந்தர் சி இயக்கத்தில் வெளிவந்த அரண்மனை படங்களின், முதல் இரண்டு பாகங்கள் பெரிய வெற்றி பெற்றன.

அதன் தொடர்ச்சியாக இப்போது அரண்மனை 3 படம் உருவாகி வருகிறது.

11 நாள் ஆக்‌ஷன்

11 நாள் ஆக்‌ஷன்

இந்தப் படத்திற்காக, சென்னை அருகே 2 கோடி செலவில் பிரமாண்ட அரண்மனை செட் அமைக்கப்பட்டு சண்டைக் காட்சி படமாகியுள்ளது. முதன் முதலில் சுந்தர் சியுடன் ஸ்டன்ட் இயக்குநர் பீட்டர் ஹெய்ன் இணைந்துள்ள இந்தப் படத்தின் ஆக்‌ஷன் காட்சி, பதினோரு நாட்கள் படமாக்கப்பட்டது.

பேய்த்தன ஃபைட்

பேய்த்தன ஃபைட்

பேய்ப் படத்துக்கு ரூ.2 கோடி செட்டில், 11 நாட்கள் ஆக்‌ஷன் காட்சி நடந்தது இதுதான் முதல் முறையாக இருக்கும் என்கிறார்கள். இந்த காட்சி பேய்த்தனமான ஃபைட்டாக மிரட்டும் என்கிறது படக்குழு. இந்த ஆக்‌ஷன் காட்சியில், ஆர்யா, ராக்ஷி கண்ணா, சுந்தர் சி, சம்பத், மதுசூதன் ராவ் ஆகியோர் நடித்தனர்.

சம்மர் ஸ்பெஷல்

சம்மர் ஸ்பெஷல்

ராஜ்கோட் மற்றும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில், நேற்று இதன் அடுத்த ஷெட்யூல் பொள்ளாச்சியில் தொடங்கியுள்ளது. படத்தில் நடித்துள்ள அனைவரும் இந்த ஷெட்யூலில் பங்கேற்கின்றனர். டிசம்பர் 1 ஆம் தேதியுடன் படப்பிடிப்பு முடிகிறது. 2021 சம்மர் ஸ்பெஷலாக இந்தப் படம் வெளியாக உள்ளது.

அவ்னி சினிமேக்ஸ்

அவ்னி சினிமேக்ஸ்

இந்தப் படத்தில், ஆர்யா, ராஷி கண்ணா, சுந்தர்.சி, ஆண்ட்ரியா, விவேக், யோகி பாபு, சாக்‌ஷி அகர்வால், சம்பத், மனோபாலா, வேல ராமமூர்த்தி, உள்பட பலர் நடிக்கின்றனர். சுந்தர். சி இயக்கும் இந்தப் படத்துக்கு யு.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சி.சத்யா இசை அமைக்கிறார். சுந்தர். சியின் அவ்னி சினிமேக்ஸ் தயாரிக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X