மோஷன் போஸ்டரே மிரட்டலா இருக்கே.. வெளியானது அரண்மணை 3 ஃபர்ஸ்ட் லுக்!

சென்னை: அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.

அரண்மனை மற்றும் அரண்மனை 2 பேய் படங்கள் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்குகிறார் சுந்தர் சி.

இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.

ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

ஃபர்ஸ்ட் லுக் அப்டேட்

இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்துள்ளது. தற்போது போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் அப்டேட் குறித்த தகவல் நேற்று வெளியானது.

இன்று காலை

இன்று காலை

இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்த நடிகர் ஆர்யா அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் இன்று காலை 11 மணிக்கு வெளியிடப்படும் என குறிப்பிட்டிருந்தார்.

அமானுஷ்ய சம்பவங்கள்

அமானுஷ்ய சம்பவங்கள்

இந்நிலையில் சொன்னப்படியே படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. டைட்டிலுக்கு ஏற்றவாரே கடந்த 2 சீரிஸ்களை போல இந்தப் படமும் அரண்மனையில் நடைபெறும் அமானுஷ்ய சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

விவேக்கிற்காக..

மோஷன் போஸ்டரே திகிலூட்டும் வகையில் மிரட்டலாக உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் இந்த படத்தை நடிகர் விவேக்கிற்காக முதல் நாள் முதல் ஷோ தியேட்டரில் பார்க்க உள்ளதாக கூறி வருகின்றனர்.

கடைசி படங்களில் ஒன்று

கடைசி படங்களில் ஒன்று

நடிகர் விவேக் கடந்த சனிக்கிழமை திடீர் மாரடைப்பால் காலமானார். அவர் கடைசியாக நடித்த பல படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கும் நிலையில் அதில் அரண்மனை 3 படமும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X