அரண்மனை 3 ஃபர்ஸ்ட் லுக் எப்போது ரிலீஸ்? வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை: அரண்மனை 3 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சுந்தர் சி இயக்கத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் அரண்மனை. பேய் படமான இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

வினய், ஹன்சிகா மோத்வானி, ஆண்ட்ரியா, ராய் லக்ஷ்மி என பெரிய பட்டாளமே நடித்த இப்படம் வசூலையும் குவித்தது.

மிரட்டலான பேய் படம்

மிரட்டலான பேய் படம்

இதனை தொடர்ந்து இதன் சீக்குவலாக அரண்மனை படத்தின் இரண்டாம் பாகத்தை அரண்மனை 2 என்ற தலைப்பில் இயக்கினார் சுந்தர் சி. 2016ஆம் ஆண்டு வெளியான மிரட்டலான பேய் படமான இந்த படமும் சக்கைப்போடு போட்டது.

அரண்மனை 3

அரண்மனை 3

இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, வைபவ், ராதாரவி என பலர் நடித்திருந்தனர். அரண்மனை சீரிஸ் படங்களுக்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து அரண்மனை 3 படத்தை இயக்கினார் சுந்தர் சி.

போஸ்ட் புரடெக்ஷன்

போஸ்ட் புரடெக்ஷன்

இந்தப் படத்தில் ஆர்யா, ராஷி கன்னா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். விவேக், யோகி பாபு உள்ளிட்டோரும் காமெடி கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இப்படத்தின் போஸ்ட் புரடெக்ஷன் பணிகள் தற்பொது நடைபெற்று வருகிறது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி நாளை காலை 11 மணிக்கு பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆகிறது. இதனை நடிகர் ஆர்யா தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X