அரண்மனை 3 படத்திலிருந்து 4வது சிங்கிள் ரெடி... ரிலீஸ் தேதி இதோ!
சென்னை : சுந்தர் சி இயக்கியுள்ள அரண்மனை3 திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பில் ரிலீசுக்கு தயாராக உள்ளது.இந்த படத்தை சுந்தர் சி மற்றும் குஷ்பூ இணைந்து தயாரித்துள்ளனர் ஆர்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு இப்படம் ரிலீஸாக இருக்க 4வது சிங்கிள் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.பேய் படங்களை வரிசை கட்டி ரீலீஸ் செய்து வரும் இயக்குனர்களை தான் சமீப காலமாக பார்த்து வருகிறோம்
அந்த வகையில் சுந்தர் சி மிக முக்கியமான ஒரு இயக்குனராக அரண்மனை படத்தை பல பாகங்களாக இயக்கி வருகிறார் . அவருக்கு என்று ஒரு தனி டார்கெட் ஆடியன்ஸை அமைத்து கொண்டு வெற்றி பெறுவது சுந்தர் சி ஸ்டைல் .

பேய் படங்களை
கலகலப்பான காமெடி திரைப்படங்களுக்குப் பெயர் போன சுந்தர் சி இப்பொழுது பேய் படங்களையும் இயக்கி அதிலும் வெற்றி கண்டு வருகிறார். அந்த வகையில் 2016 ஆம் ஆண்டு வெளியான அரண்மனை 1 மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி அந்த படமும் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது.

மூன்று கதாநாயகிகள்
இந்த நிலையில் அடுத்ததாக அரண்மனை மூன்றாவது பாகத்தை இப்போது சுந்தர் சி இயக்கியுள்ளார். இப்படத்தில் நடிகர் ஆர்யா ஹீரோவாக நடிக்க கதாநாயகிகளாக மூன்று பேர் நடித்துள்ளனர். அதில் ராஷி கண்ணா ஆர்யாவுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வால் இதர கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.

ட்ரெண்டிங்கில் முதலிடத்தில்
விவேக்,யோகிபாபு, மனோபாலா, நளினி, மைனா நந்தினி, இமான் அண்ணாச்சி என பலர் இப்படத்தில் நடித்திருக்க சுந்தர் சியும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். குஷ்பு மற்றும் சுந்தர் சி இணைந்து இந்த திரைப்படத்தை தயாரித்து உள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றதுடன் ட்ரெண்டிங்கில் முதலிடத்திலும் இருந்தது.

4வது சிங்கிள் ரிலீஸ்
ஆயுதபூஜை பண்டிகையை குறிவைத்து இப்படம் ரிலீஸாக இருக்க தற்பொழுது 4வது சிங்கிள் பாடல் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. ஏற்கனவே 3 பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அதைத் தொடர்ந்து 4வது பாடல் "செங்காந்தளே" அக்டோபர் 6ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அறிவிப்பு போஸ்டரில் ஆண்ட்ரியா கர்ப்பமாக இருக்கின்றார். இப்படத்திற்கு சத்யா சி இசையமைத்துள்ளார் .


Click it and Unblock the Notifications











