Don't Miss!
- News
பொன்னையன் சொன்னது..அதை விடுங்க அரசியல்ல சகஜம்..பெருசா எடுத்துக்கலை..சட்டென சொன்ன அண்ணாமலை
- Automobiles
ஓலா எல்லாம் ஓரமாதான் நிக்கணும் போலிருக்கே... வர 10ம் தேதிக்காக இப்பவே ஏங்கி நிற்கும் இருசக்கர வாகன பிரியர்கள்!
- Technology
Jio, Airte, Vi வழங்கும் மலிவு விலை திட்டங்கள்: அதிக நன்மைகள் வழங்கும் நிறுவனம் எது?
- Finance
புதிய வருமான வரிக்கு பலே வரவேற்பு.. 66% பேர் மாறுவார்கள்.. சொல்வது யார் தெரியுமா..?
- Sports
"முன்பு கோலி.. இப்போ உம்ரான் மாலிக்" இந்திய வீரர்களை சீண்டும் சோஹைல் கான்.. இப்படியா சொல்லுவீங்க??
- Lifestyle
சுக்கிரன் உருவாக்கும் மாளவியா யோகம்: பிப்ரவரி 15 முதல் இந்த 5 ராசிக்கு சூப்பரா இருக்கப் போகுது..
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
அரண்மனையில் பூட்டிவைத்த அறைக்குள் இருக்கும் அமானுஷ்யம்.. அரண்மனை 3!
சென்னை: இயக்குனர் சுந்தர் சி இயக்கி தயாரித்துள்ள திரைப்படம் அரண்மனை 3.
ஆர்யா இதில் ஹீரோவாக நடிக்க ராஷி கண்ணா, ஆண்ட்ரியா, சாக்ஷி அகர்வால் என மூன்று கதாநாயகிகள் இதில் நடித்துள்ளனர்.
அரண்மனையில் பூட்டிவைத்த அறைக்குள் இருக்கும் அமானுஷ்யம் அங்கே இருப்பவர்களை தன் வசப்படுத்த நினைப்பதே படத்தின் கதைக்களமாக உருவாகி உள்ளது.
தீராத
பகையுடன்
காத்திருக்கும்
ஆன்மா…
அரண்மனை
3
டிரைலர்…
எப்படி
இருக்கு
?

சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா
நடிகர் ஆர்யாவுக்கு கடைசியாக வெளியான சார்பட்டா பரம்பரை மிகப்பெரிய பெயரை பெற்று தந்துள்ளது. இந்த படத்தில் இவரது நடிப்பு பார்க்கும் அனைவரையும் அசர வைத்துள்ளது. எனவே அடுத்தடுத்து ஆர்யாவின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் ரசிகர்களிடம் தனி கவனத்தைப் பெற்று வருகிறது அந்த வகையில் இப்போது சுந்தர் சி இயக்கத்தில் ஆர்யா அரண்மனை 3ல் ஹீரோவாக நடித்துள்ளார்.

முதல் முறையாக பேய் கதையில்
இதுவரை ஆர்யா பல கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் முதல் முறையாக பேய் கதையில் நடிப்பது இதுவே முதல் முறையாகும். இயக்குனர் சுந்தர் சி இதற்கு முன்பு அரண்மனை 1 மற்றும் 2 பாகங்களை இயக்கி வெற்றி கண்டார் அதைத் தொடர்ந்து இப்போது மூன்றாவது பாகமாக இப்படம் உருவாகியுள்ளது.

கண்களுக்கு குளிர்ச்சியாக கிளாமர்
மிரள வைக்கும் ஹாரர் , சிரிப்புக்கு பஞ்சமில்லாத காமெடி, கண்களுக்கு குளிர்ச்சியாக கிளாமர் என அனைத்து அம்சங்களும் கொண்ட படமாக அரண்மனை 3 உருவாகியுள்ளது . இதில் ஆர்யாவுக்கு ஜோடியாக ராஷி கண்ணா நடித்து இருக்க ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வாலும் இதில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். விவேக்,வேல ராமமூர்த்தி,யோகி பாபு, மனோபாலா,மைனா நந்தினி உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அரண்மனையில் அமானுஷ்யம்
பலரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த அரண்மனை 3 ட்ரெய்லர் தற்போது வெளியாகி அனைவராலும் கவரப்பட்டது. அரண்மனையில் நீண்டகாலமாக பூட்டி வைக்கப்பட்ட அறையில் உள்ள அமானுஷ்யம் அங்கு இருப்பவர்களை எவ்வாறெல்லாம் பாடாய் படுத்துகிறது என்பது பற்றிய திரைப்படமாக அரண்மனை 3 உருவாகியுள்ளது.