மிரட்டும் அரண்மனை 3 ட்ரெயிலர்... 2 மில்லியனை தாண்டி சாதனை
சென்னை : அரண்மனை 3 படத்தின் ட்ரெயிலர் வெளியாகி அனைவரது லைக்ஸ்களையும் பெற்றுள்ளது.
வெளியான இரு தினங்களில் 2 மில்லியன் பார்வைகளை பெற்று சாதனை புரிந்துள்ளது.
மேலும் யூடியூபில் முதல் இடத்தில் உள்ளது.

அரண்மனை 3 படம்
சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள படம் அரண்மனை 3. இதன் முதல் இரண்டு பாகங்கள் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்று வெற்றிப்பட வரிசையில் இடம்பெற்ற நிலையில் தற்போது 3வது பாகம் ரிலீசுக்கு தயாராக உள்ளது. சுந்தர் சி தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்த மாதத்தில் தியேட்டர்களில் ரிலீசாக உள்ளது.

மிரட்டலான இசை
ஆர்யா, சுந்தர் சி, ஆன்ட்ரியா ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு சத்யா என்பவர் இசையமைத்துள்ளார். இசை மிரட்டலாக உள்ளது. இரு தினங்களுக்கு முன்பு இந்தப் படத்தின் ட்ரெயிலர் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது.

சிறப்பான பேய் அனுபவம்
முந்தைய படங்களை போலவே இந்த படமும் ரசிகர்களுக்கு சிறப்பான பேய் அனுபவத்தை கொடுக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்தப் படத்தில் மறைந்த காமெடி நடிகர் விவேக் நடித்துள்ளது படத்திற்கு கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

விவேக் நடிப்பு
விவேக்குடன் யோகி பாபு உள்ளிட்டவர்களும் படத்தில் இணைந்துள்ளதால் படத்தில் காமெடிக்கு பஞ்சமிருக்காது என்று எதிர்பார்க்கலாம். மேலும் விவேக் நடிப்பை பார்க்க நினைக்கும் அவரது ரசிகர்களுக்கு இந்தப் படம் சிறப்பாக அமையும் என்றும் எதிர்பார்க்கலாம்.

சாதனை புரியும் ட்ரெயிலர்
இந்நிலையில் வெளியான இரு தினங்களில் இந்த படத்தின் ட்ரெயிலர் 2 மில்லியன் பார்வைகளை தாண்டியுள்ளது. மேலும் யூடியூப்பிலும் முதலிடத்தில் உள்ளது. சர்பட்டா பரம்பரையில் வந்த மீசை கெட்டப்புடன் ஆர்யாவை இந்தப் படத்திலும் காண முடிகிறது.


Click it and Unblock the Notifications











