அரண்மனை 3 டிரைலர் ரிலீஸ் தேதி வெளியானது!.

சென்னை : இயக்குனர் சுந்தர் சியின் இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை3 திரைப்படத்தில் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார்.

அரண்மனை 1 மற்றும் 2 என இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பில் மூன்றாவது பாகம் உருவாகி உள்ளது.

ஆயுத பூஜைக்கு இப்படம் வெளியாக இருக்க இப்பொழுது டிரைலர் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

கலகலப்புக்கு பஞ்சமிருக்காது

கலகலப்புக்கு பஞ்சமிருக்காது

இயக்குனர் சுந்தர் சியின் திரைப்படங்கள் என்றாலே கலகலப்புக்கு பஞ்சமிருக்காது அந்த அளவுக்கு காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து படங்களை தொடர்ந்து இயக்கி வரும் சுந்தர் சி சமீபகாலமாக பேய் படங்களை இயக்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார். அந்த வகையில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான அரண்மனை திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை அள்ளியது.

மூன்றாவது பாகம்

மூன்றாவது பாகம்

அரண்மனை வெற்றியைத் தொடர்ந்து அதன் இரண்டாவது பாகமும் வெளியானது இந்த படமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது அதன் தொடர்ச்சியாக மூன்றாவது பாகம் உருவாகிறது. அரண்மனை மூன்றாவது பாகத்தில் ஆர்யா ஹீரோவாக நடிக்க ராஷி கண்ணா கதாநாயகியாக நடிக்கிறார். மேலும் ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வாலும் இதில் கதாநாயகிகளாக நடிக்கின்றனர்.

3 கோடி பட்ஜெட்டில்

3 கோடி பட்ஜெட்டில்

ஹாரர் பாதி காமெடி பாதி என குடும்பத்துடன் கண்டுகளிக்க கூடிய கமர்சியல் பார்முலாவில் உருவாகியுள்ள இப்படத்தில் யோகி பாபு,விவேக்,மனோபாலா,மைனா நந்தினி,நளினி,வேல ராமமூர்த்தி என மிகப் பெரிய பட்டாளமே நடித்துள்ளது. குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சுமார் 3 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.

டிரைலர் தேதி

டிரைலர் தேதி

அனைத்து கட்டப் பணிகளும் முடிந்து இப்படம் வரும் ஆயுதபூஜைக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரைலர் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி செப்டம்பர் 30ஆம் தேதி மாலை 5 மணிக்கு இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தை வெளியிடுகிறது. சத்யா சி இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X