‘அச்சச்சோ’ அரண்மனை 4 வீடியோ பாடல் வந்துடுச்சு.. தமன்னாவை எந்தவொரு பிளர் இல்லாமல் பார்க்கலாம்!
சென்னை: அரண்மனை 4 படத்தில் பேயாக நடித்துள்ள தமன்னா படம் முழுவதும் சேலை அணிந்து ஹோம்லி லுக்கில் மட்டுமே ரசிகர்களுக்கு காட்சி தந்த நிலையில், கடைசியில் அவரே கடுப்பாகி காவாலா பாட்டுக்கு இணையாக கவர்ச்சி உடையில் ராஷி கன்னாவுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருப்பார்.
படம் முடிந்து விட்டது என நினைத்த ரசிகர்களுக்கு ஹிப்ஹாப் தமிழா ஆதி இசையில் தமன்னா மற்றும் ராஷி கன்னா நடனமாடும் 'அச்சச்சோ" பாடல் கண்களுக்கு குளிர்ச்சியாக தியேட்டரை விட்டு வெளியேறும் போது ஹேப்பி மோடில் வெளியேற உதவியாக உருவாகி இருக்கிறது.

திரையரங்குகளில் அந்த பாடலில் தமன்னா அணிந்திருந்த உடை காரணமாக பல இடங்களில் பிளர் செய்யப்பட்டு இருந்தன. இந்நிலையில், யூடியூபில் தற்போது எந்தவொரு பிளரும் செய்யாமல் அந்த பாடல் வெளியாகி இருக்கிறது.
25 கோடி வசூல்: அரண்மனை 4 திரைப்படம் 23 கோடி வசூலை நேற்று வரை வசூல் செய்திருப்பதாகவும் இன்று இதுவரை 25 கோடி வசூலை அந்த படம் தாண்டி சென்று கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கில்லி ரீ ரிலீஸ் படத்துக்குப் பிறகு 25 கோடி வசூலைக் கடந்த படமாக அரண்மனை 4 மாறி இருக்கிறது. இந்த வார இறுதியில் 50 கோடி ரூபாய் வசூலை அரண்மனை 4 திரைப்படம் அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுந்தர் சி கம்பேக்: அரண்மனை 2 படத்துக்கு பிறகு தொடர்ந்து பல தோல்வி படங்களை கொடுத்து வந்த சுந்தர் சி கடைசியாக அரண்மனை 4 படம் மூலம் மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் சோலோ ஹீரோவாக இருந்து மொத்த படத்தையும் சிறப்பாக கையாண்டு வெற்றி படமாக மாற்றி இருக்கிறார். சிலர் கடுமையான விமர்சனங்கள் படத்திற்கு கொடுத்தாலும் மக்களுக்கு படம் பிடித்து விட்டதனால் தொடர்ந்து தியேட்டர்களில் ஆதரவு பெருகி வருகிறது.
அச்சச்சோ பாடல் ரிலீஸ்: அரண்மனை 4 படத்தின் புரமோஷனுக்காக வெளியிடப்பட்ட அந்த பாடல் தற்போது முழு வீடியோ பாடலாக வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. படம் முடிந்து தியேட்டரில் ஒளிபரப்பப்பட்ட அச்சச்சோ பாடல் எந்தவொரு பிளரும் செய்யாமல் தமன்னாவின் முழு கவர்ச்சியை பார்த்து ரசிக்கும் விதமாக யூடியூபில் தற்போது வெளியாகியிருக்கிறது. இந்த பாடலுக்கு தற்போது ஏகப்பட்ட பிரபலங்கள் ரீல்ஸ் போட ஆரம்பித்துள்ளனர்.
ரிஹர்சலே செய்யல: இந்த பாடல் படத்திலேயே இல்லாத நிலையில், கடைசி நேரத்தில் தான் ஹிப் ஹாப் தமிழா ஆதி இந்த பாடலை போட்டுக் கொடுத்தார் என்றும் ரிஹர்சலே செய்யாமல் தமன்னாவும் ராஷி கன்னாவும் இந்த பாடலுக்கு நடனமாடியுள்ளனர் என பிருந்தா மாஸ்டர் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். மேலும், ராஷி கன்னா சிறந்த டான்ஸர் என்றும் அவர் எல்லா ஸ்டெப்புகளையும் செம ஈஸியாக ஆடுவதை பார்த்து தானே அசந்து போய் விட்டதாகவும் விரைவில் சூப்பரான பாடல்களுக்கு எல்லாம் ராஷி கன்னா நடனமாடுவார் என்றும் பிருந்தா மாஸ்டர் அந்த பேட்டியில் கூறினார். தமன்னா மற்றும் ராஷி கன்னாவை செட்டில் அந்த உடையில் பார்த்த போதே பலரும் இது ஹிட் பாடல் என சொன்னார்கள் அதே போல செம ஹிட் பாடலாக மாறிவிட்டது என்றார்.


Click it and Unblock the Notifications











