Aranmanai 4 Day 2 Box Office: அடித்து ஆடும் அரண்மனை 4.. 2வது நாளில் பல கோடி எகிறிய வசூல்!

சென்னை: அரண்மனை 3 திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை என்றாலும் அந்த வரிசை படங்களை அப்படியே விட்டுவிட்டு வேறு ஒரு இடத்துக்கு செல்லாமல் மீண்டும் அதை சுந்தர் சி கையில் எடுத்து இயக்கி நடித்துள்ளார்.

விஜய் சேதுபதி மற்றும் சந்தானம் இந்த பாகத்தில் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியான நிலையில், அவர்கள் இருவரும் விலகியதும் படம் அவ்வளவுதான் என பலரும் ட்ரோல் செய்தனர்.

Aranmanai 4 Day 2 Box Office collection is very huge

அரண்மனை4 திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாக வேண்டிய படம். பல தடைகளைத் தாண்டி கடந்த மே 3-ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் விமர்சனங்களை கடந்து வெற்றிநடை போட்டு வருகிறது.

இயக்குநர் சுந்தர் சி: 1995 ஆம் ஆண்டு முறைமாமன் எனும் படத்தை இயக்கி இயக்குநராக அறிமுகமானார் சுந்தர் சி. முறை மாப்பிள்ளை, உள்ளத்தை அள்ளித்தா, மேட்டுக்குடி, அருணாச்சலம், ஜானகிராமன், நாம் இருவர் நமக்கு இருவர், உன்னைத்தேடி, சுயம்வரம், உனக்காக எல்லாம் உனக்காக, அன்பே சிவம், வின்னர், கிரி, ரெண்டு, கலகலப்பு, தீயா வேலை செய்யணும் குமாரு என பலவிதமான படங்களை இயக்கி வந்த சுந்தர் சி கடைசியாக 2014 ஆம் ஆண்டு அரண்மனை படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் வெற்றிக்கு பிறகு வரிசையாக அரண்மனை பார்க்க படங்களை இயக்கி வருகிறார்.

Aranmanai 4 Day 2 Box Office collection is very huge

தொடர்ந்து சொதப்பல்: அரண்மனை 2 படத்துக்கு பிறகு கலகலப்பு 2 படத்தை இயக்கினார். அதன் பின்னர் சிம்புவை வைத்து 2019 ஆம் ஆண்டு சுந்தர் சி இயக்கிய வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்படம் படுத்த தோல்வியை சந்தித்தது. அதே ஆண்டு விஷாலை வைத்து இயக்கிய ஆக்சன் திரைப்படமும் வெற்றிப் பெறவில்லை. ஆர்யாவை வைத்து அரண்மனை 3 படத்தை எடுத்த சுந்தர் சிக்கு மீண்டும் தோல்வி கிடைத்தது. கடைசியாக 2022 ஆம் ஆண்டு ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ஆர்யா என பல நடிகர்களை வைத்து அவர் இயக்கிய காபி வித் காதல் படமும் படுத்துவிட்டது.

அரண்மனை 4: தொடர்ந்து படங்கள் ஃபிளாப் ஆகி வந்தாலும் எப்படியாவது மீண்டும் ஒரு வெற்றியைப் பெற வேண்டும் என போராடிய சுந்தர் சி இயக்கி நடித்துள்ள அரண்மனை 4 திரைப்படம் இந்த வாரம் தியேட்டரில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. சில பல குறைகள் படத்தில் இருந்தாலும் இந்த ஆண்டு வெளியான பல சொதப்பல் படங்களுக்கு இந்த படம் பரவாயில்லை என்கிற நிலையில் ஹாரர் காமெடி படத்தை மக்கள் தியேட்டரில் போய் பார்த்து ரசித்து வருகின்றனர். ஜெயிலர் படத்துக்கு தமன்னாவின் காவலா பாடல் எந்த அளவுக்கு பலம் சேர்த்ததோ அதைவிட பல மடங்கு இந்தப் படத்தில் தமன்னாவின் நடிப்பு படத்தை காப்பாற்றி இருப்பதாக கூறுகின்றனர்,

11 கோடி வசூல்: சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷி கன்னா, கோவை சரளா, யோகி பாபு, விடிவி கணேஷ், சந்தோஷ் பிரதாப், ராமச்சந்திரா ராஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த மே 3-ஆம் தேதி வெளியான அரண்மனை 4 திரைப்படம் முதல் நாளில் 4.65 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் இரண்டாம் நாளில் 6.25 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஒட்டுமொத்தமாக இரண்டு நாட்களில் இந்த படம் 10.90 கோடி ரூபாய் வசூல் செய்து வெற்றிப் பாதையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இன்று 8 முதல் 10 கோடி ரூபாய் வசூல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X