ஆப்ரேஷனுக்கு பின் இருப்பேனானு தெரியாது.. அஜித் பற்றிய உண்மையை போட்டுடைத்த சுந்தர் சி!
சென்னை: சுந்தர் சி இயக்கத்தில் உருவான அரண்மனை 4 திரைப்படம் மே 3ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்த படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் சி, உன்னைத் தேடி படத்தை இயக்கிய போது அஜித்துடன் இருந்த அனுபவத்தையும் அவரின் உடல் நிலை குறித்து பல விஷயத்தையும் பகிர்ந்து கொண்டார்.
சுந்தர் சி இயக்கத்தில் இதுவரை அரண்மனை மூன்று பாகங்கள் வெளியாகி வெற்றி பெற்ற நிலையில், இத்திரைப்படத்தின் நான்காம் பாகம் வெளியாகி உள்ளது. பேய், அமானுஸ்யங்களைக் கதைக்களமாக கொண்ட இந்த படத்தில் சுந்தர் சி, தமன்னா, ராஷிகண்ணா, கோவை சரளா என பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. முன்னதாக அரண்மனை 4 ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சுந்தர் சி, அஜித் பற்றி பல விஷயத்தை பேசி உள்ளார்.

இருப்பேனானு தெரியாது: அதில், உன்னைத் தேடி படத்தை எடுத்த போது பாடல் காட்சிக்காக நாங்கள் நியூசிலாந்தில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. அப்போது அவர், முதுகுவலி பிரச்சனையாக இருக்கிறது. இதனால், முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றார். எனக்கு அறுவை சிகிச்சை செய்யும் மருத்துவர் இன்னும் 7 நாளில் அப்ராடில் செட்டில் ஆக போகிறார் அதற்குள் நான் ஆப்ரேஷன் செய்து ஆக வேண்டும் என்றார். அதுமட்டுமில்லாமல் அறுவை சிகிச்சைக்கு பின் உட்காரக்கூட முடியாத நிலை ஏற்படலாம், இதனால், இருக்கும்போதே அனைத்தையும் எடுத்துவிடுங்கள் என்றார்..
கடுமையாக உழைத்தார்: இதனை தயாரிப்பு தரப்பிடம் கூறினால், அவர்கள் சம்மதித்தாலும், இல்லை என்றாலும் அடுத்தடுத்த இழப்புகள் ஏற்படும். இதனால் அஜித் சார் என்னிடம், கூறியதால், படப்பிடிப்பை விரைவாக முடிக்க திட்டமிட்டேன். நியூசிலாந்தில் அந்த நேரத்தில் 22 மணிநேரம் சூரிய வெளிச்சம் இருந்ததால், இரவு பகல் பார்க்காமல், ஒரே வாரத்தில் அஜித்தின் பகுதிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு அவரை அனுப்பி வைத்தோம்.
சாதனை படைத்துள்ளார்: அவரின் வலி எனக்கு அவர் சொல்லும் போது புரியவில்லை. ஆனால், அவருக்கு முதுகில் இருக்கும் பிரச்சனையால், கால்களில் உணர்ச்சியே இல்லை. நாம் ரோட்டில் நடந்தால் அடுத்த அடுத்த அடியெடுத்து வைத்து நடந்து கொண்டே இருப்போம். ஆனால், அவர், தரையை பார்த்து தான் அவர் அடுத்த காலடியை எடுத்து வைப்பார். ஏனெனில் அவர் கால்களை எங்கு வைத்தோம் என்ற உணர்ச்சியே இருக்காது. அவரின் வாழ்க்கை பல வேதனைகளை கடந்தது. ஆனால், அந்த வேதனைகளை கடந்து சாதனை ஆக்கி இருக்கிறார் என்று சுந்தர் சி அந்த பேட்டியில் கூறியுள்ளார்.
உன்னைத் தேடி: சுந்தர் சி இயக்கத்தில், அஜித்குமார், மாளவிகா, சிவகுமார், மனோரமா, விவேக், கிரண், ஸ்ரீவித்யா, வினு சக்கரவர்த்தி, அல்வா வாசு உட்பட பலர் நடிக்க 1999 ல் வெளியான படம் உன்னைத்தேடி. இந்த படத்தில் வரும் காற்றாக வருவாயா என்ற பாடல் படப்பிடிப்பின் போது நடந்த சம்பவத்தைத் தான் சுந்தர் சி அந்த பேட்டியில் பகிர்ந்து கொண்டார்.


Click it and Unblock the Notifications











