அடிதூள்.. 50 கோடி வசூலை அசால்ட்டா தாண்டிய அரண்மனை 4.. 2வது வாரத்தில் செஞ்சுரி அடிக்குமா?
சென்னை: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் கடந்த நான்கு மாதங்களாக வெளியான பல படங்கள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியைப் பெறவில்லை. குறிப்பாக அந்த படங்களில் சுவாரசியம் மற்றும் ரசிகர்களை கவரும் வித்தை மிஸ் ஆனதால் படத்தை தியேட்டருக்கு வந்து பார்ப்பதை ரசிகர்கள் பெருமளவில் தவிர்த்து விட்டனர்.
அதன் காரணமாக ஏற்கனவே தமிழ் சினிமாவில் வெளியான பிளாக்பஸ்டர் படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து தியேட்டர்களை நடத்த வேண்டிய சூழலுக்கு தமிழ் சினிமா தள்ளப்பட்டது.

மலையாளத்தில் இந்த ஆண்டு வெளியான பிரேமலு, மஞ்சுமெல் பாய்ஸ், பிரமயுகம், ஆடு ஜீவிதம், ஆவேசம் மற்றும் வருஷங்களுக்கு சேஷம் என பல படங்கள் வெற்றி படங்களாக அமைந்த நிலையில், தமிழ் சினிமா அரண்மனை 4 படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்து இருப்பதாக சினிமா வட்டாரங்கள் கொண்டாடி வருகின்றன.
கருமாரியா காப்பேன்: பாக் பேய் ஆரம்பத்திலேயே நடிகை தமன்னாவின் கணவர் சந்தோஷ் பிரதாப்பை கொன்றுவிட்டு தமன்னாவையும் கொன்று விடுகிறது. அந்த பேயிடம் இருந்து இறப்பதற்கு முன்பாக எப்படி குழந்தைகளை தமன்னா காப்பாற்றுகிறாரோ இறந்த பின்னர் ஆவியாக மாறிய நிலையிலும் படத்தின் பாடலில் வருவது போல கருமாரியா காத்து நிற்கும் காட்சிகள் தான் படத்தின் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம்.
50 கோடி வசூல்: அரண்மனை 4 திரைப்படம் இந்த ஆண்டின் முதல் பிளாக்பஸ்டர் தமிழ் சினிமாவென தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியான அரண்மனை 4 திரைப்படம் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து சீரான வசூலை அள்ளி தமிழ்நாட்டில் மட்டும் 40 கோடி ரூபாயும் உலக அளவில் 50 கோடி ரூபாய் வசூலை நெருங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அரண்மனை 5: இந்த படத்தின் வெற்றி சந்தோஷத்தில் இருக்கும் சுந்தர் சி அடுத்ததாக கலகலப்பு 3 மற்றும் அரண்மனை 5 படத்தை அசுர வேகத்தில் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அரண்மனை 4 படத்தில் ஆரம்பம் முதல் இறுதி வரை ஆடியன்ஸை எங்கேயும் மொபைல் பார்க்க விடாமல் பரபரப்பாக வைத்துக் கொண்டதை போல இனி வரும் படங்களையும் சுந்தர் சி எடுத்தால் நிச்சயம் வெற்றி பெறுவார் என்கின்றனர்


Click it and Unblock the Notifications











