Aranmanai 4: அயலானுக்கு ஆப்படிக்க ரெடியான அரண்மனை 4?.. ரிலீஸ் தேதியை அறிவித்த நடிகை குஷ்பு!
சென்னை: சுந்தர். சி இயக்கத்தில் அரண்மனை, அரண்மனை 2 மற்றும் 3 படங்கள் இதுவரை வெளியாகி உள்ளன. முதல் பாகத்தில் வினய் - ஹன்சிகா, இரண்டாம் பாகத்தில் சித்தார்த் - த்ரிஷா, மூன்றாம் பாகத்தில் ஆர்யா - ராஷி கன்னா நடித்த நிலையில், 4ம் பாகத்தில் விஜய்சேதுபதி, சந்தானம், தமன்னா நடிக்கப் போவதாக ஆரம்பத்தில் அறிவிக்கப்பட்டது.
ஆனால், அந்த அறிவிப்பு வெளியான சில நாட்களிலேயே படத்தில் இருந்து விலகுவதாக விஜய்சேதுபதி அறிவித்துவிட்டார். சுந்தர். சியே இந்த முறை மெயின் ஹீரோவாக நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் அந்த படத்தின் தயாரிப்பாளரும் நடிகையுமான குஷ்புவின் பிறந்தநாளை முன்னிட்டு அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
அரண்மனை 4 ரிலீஸ் தேதி: சுந்தர். சி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள அரண்மனை 4 படத்தில் தமன்னா, ஆண்ட்ரியா உள்ளிட்ட முன்னணி ஹீரோயின்கள் நடித்துள்ளனர். இந்நிலையில், அரண்மனை 4 படத்தின் ரிலீஸ் தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் அந்த படத்தின் தயாரிப்பாளர் குஷ்பு.
பொங்கல் ரிலீஸ்: அடுத்த ஆண்டு பொங்கலுக்கு அரண்மனை 4 திரைப்படம் ரிலீஸாகும் என்கிற அறிவிப்புடன் ஒரு அரண்மனைக்கு இரண்டு குழந்தைகளுடன் ஒரு பெண் செல்வது போன்ற போஸ்டரையும் தற்போது வெளியிட்டு திகிலை கிளப்பி உள்ளனர். இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனுக்கு சிக்கல் ஆகிவிடுமே என்கிற ட்ரோல்களும் கிளம்பி உள்ளன.
அயலானுக்கு ஆப்பா?: தீபாவளிக்கு பலத்த போட்டி நிலவி வரும் சிவகார்த்திகேயனின் அயலான் திரைப்படம் பொங்கல் பண்டிகையை டார்கெட் செய்த நிலையில், தற்போது அதற்கும் வேட்டு வைக்க அரண்மனை 4 படம் வந்து விட்டதாக ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர்.
மூன்றே மொக்கை: அரண்மனை சீரிஸ் படங்கள் ரசிகர்களை அதிகம் கவரவில்லை என்றும் முதல் இரண்டு படங்களை சகித்துக் கொண்டாலும், ஆர்யா பேயாக நடித்த அரண்மனை 3 பாகம் சூரமொக்கை என்றும் 4வது பாகத்தில் ஆரம்பத்திலேயே விஜய்சேதுபதி வெளியேறிய நிலையில், படம் வருவதற்கு முன்னதாகவே ரிசல்ட் தெரிந்து விட்டது என அரண்மனை 4 படத்தையே கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











