குஷ்புவை குமுற வைத்த சுந்தர் சி.யின் 'அரண்மனை டீஸர்'
சென்னை: சுந்தர்.சி. இயக்கி வரும் அரண்மனை படத்தின் டீஸரை யாரோ கசியவிட்டுவிட்டது குஷ்புவை கோபம் அடைய வைத்துள்ளது.
ஹன்சிகாவை வைத்து சுந்தர். சி. இயக்கியுள்ள படம் அரண்மனை. இந்த படத்தின் மூலம் ஹன்சிகாவுக்கு நல்ல பெயர் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அரண்மனை படத்தின் டீஸர் இணையதளத்தில் வெளியானது.
டீஸரை பார்த்த ரசிகர்கள் இது என்ன இப்படி மோசமாக உள்ளது என்று ட்விட்டரில் குஷ்புவிடம் தெரிவித்தனர்.
குஷ்பு
அரண்மனை டீஸர் இயக்குனருக்கே தெரியாமல் ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. இது தயாரிப்பு நிறுவனத்தில் உள்ள யாரோ சில விஷமிகளின் வேலை என்று குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
சுந்தர் சி.
டீஸர் ரிலீஸானது குறித்து நான் கூறிய பிறகு தான் சுந்தருக்கே தெரிய வந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தார். அதே போன்று தான் கார்த்திக் ராஜாவும், எடிட்டர் ஸ்ரீகாந்தும் அதிர்ச்சி அடைந்தனர் என்று குஷ்பு ட்வீட் செய்துள்ளார்.
காத்திருங்கள்
கலர் சரிபார்த்தல் உள்ளிட்டவை செய்யாமல் டீஸர் வந்துள்ளது. இந்த படத்திற்காக பலரும் கடினமாக உழைத்து வருகின்றனர். அதிகாரப்பூர்வ ரிலீஸுக்காக காத்திருங்கள் ப்ளீஸ் என்று தெரிவித்துள்ளார் குஷ்பு.
சதி
படம் ரிலீஸாவதற்கு முன்பே அரண்மனை குறித்து பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அதை கெடுக்க யாரோ சதி செய்துள்ளனர். ரிலீஸுக்காக காத்திருக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
தயாரிப்பு
இது எங்களின் தயாரிப்பு இல்லை. அதனால் தான் நடந்தவை பற்றி தெரியவில்லை. அதனால் சிலர் அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் குஷ்பு.


Click it and Unblock the Notifications











