நொடிக்கு நொடி திகில்... அரண்மனை-3ல் மிரட்டியுள்ள ஆர்யா!
சென்னை : நடிகர் ஆர்யாவின் நடிப்பில் சுந்தர் சியின் இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ளது அரண்மனை பாகம் 3.
ராஷி கண்ணா,சாக்ஷி அகர்வால், ஆண்ட்ரியா என மூன்று கதாநாயகிகள் நடித்திருக்க இதில் ஆண்ட்ரியா கர்ப்பமானவராக நடித்துள்ளார்.
அக்டோபர் 14-ஆம் தேதி திரையரங்குகளில் அரண்மனை 3 வெளியாக உள்ள நிலையில் நொடிக்கு நொடி திகில் கிளப்பும் புதிய வீடியோவை படக்குழு இப்பொழுது வெளியிட்டுள்ளது.

ஆண்ட்ரியா கர்ப்பமான பெண்ணாக
இதுவரை காதல் நாயகன் மற்றும் ஆக்ஷன் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்த ஆர்யா இப்பொழுது அரண்மனை 3 திரைப்படத்தில் மிரட்டும் பேயாக வர உள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் உருவாகியுள்ள அரண்மனை 3 பாகத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை ராஷி கண்ணா நடித்துள்ளார். ஆண்ட்ரியா மற்றும் சாக்ஷி அகர்வாலும் இப்படத்தில் கதாநாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் இதில் ஆண்ட்ரியா கர்ப்பமான பெண்ணாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அக்டோபர் 14-ஆம் தேதி ரிலீஸ்
குஷ்புவின் அவ்னி மூவிஸ் இணைந்து தயாரித்துள்ள இந்த திரைப்படம் சில மாதங்களுக்கு முன்பே வெளியாக தயாராக இருந்தது ஆனால் கொரோனா பரவல் காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போக சென்ற மாதம் படபிடிப்பு பணிகளை முடித்து வரும் அக்டோபர் 14-ஆம் தேதி படம் ரிலீஸ் ஆகிறது.

காமெடிக்கும் பஞ்சமில்லை
அரண்மனை 1 மற்றும் 2 மிகப்பெரிய வெற்றிபெற்ற சூழலில் அரண்மனை 3 ம் பாகத்தையும் இயக்குனர் சுந்தர் சி இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஹாரர் மட்டுமல்லாமல் காமெடிக்கும் இந்த திரைப்படத்தில் பஞ்சமில்லை என சொல்லும் அளவிற்கு நிறைய காமெடி நடிகர்கள் இதில் நடித்துள்ளனர். யோகி பாபு, விவேக், மனோபாலா,நளினி என பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். முந்தைய பாகங்களில் கதாநாயகிகள் பேயாக நடித்திருக்க சற்று வித்தியாசமாக அரண்மனை 3ம் பாகத்தில் ஆர்யாவுக்கு பேய் பிடித்திருப்பது போல கதையம்சம் அமைக்கப்பட்டுள்ளது.

புதிய ப்ரோமோ வீடியோவை
குறிப்பாக இப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி மட்டும் சுமார் 3 கோடி ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. சுந்தர் சி இதுவரை இயக்கிய திரைப்படங்களில் அதிக பொருட்செலவில் கிளைமாக்ஸ் காட்சி எடுக்கப்பட்டது இந்த படத்திற்காக மட்டும்தான் . இவ்வாறு பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி உள்ள அரண்மனை 3 இன்னும் சில தினங்களில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்க தற்பொழுது ஆக்ஷன் காட்சிகளுடன் கூடிய புதிய ப்ரோமோ வீடியோவை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











