கணவரை வம்பிழுக்கும் அறந்தாங்கி நிஷா.. வைரலாகும் வீடியோ !

சென்னை: அறந்தாங்கி நிஷா தன் கணவருடன் டிக்டாக்குகள் செய்து பொழுதுபோக்கி வருகிறார்.

Recommended Video

கணவரை வம்பிழுக்கும் அறந்தாங்கி நிஷா.. வைரலாகும் வீடியோ !

இந்த ஊரடங்கு நேரத்தில் பலரின் பொழுதுபோக்காக உள்ளது டிக்டாக் தான். பலரும் அதை விரும்பி பார்த்தும் வீடியோ எடுத்தும் தங்கள் நேரத்தை போக்கி வருகின்றனர். அதே போல, அறந்தாங்கி நிஷாவும் அவரது கணவரும் டிக்டாக்கில் வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக்கிலும் பகிர்ந்து வருகின்றனர். இதனால், அறந்தாங்கி நிஷாவின் காமெடி டிக்டாக்குகள் சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது .

Aranthangi nisha and her husbands viral and famous tiktok video

மேலும், டி.எஸ்.கே என்று அழைக்கபடும் திருச்சி சரவண குமார் செய்த டிக்டாக்கை அறந்தாங்கி நிஷா தன் கணவருடன் கலாய்த்து இருக்கிறார். டிக்டாக்கில் சரவண குமார் சைக்கோ படத்தில் வரும் உன்ன நெனச்சு பாடலுக்கு உருகி போய் டிக்டாக் செய்ய, அதற்கு எதிர்மாதிரியாக நிஷாவும் அவரது கணவரும் அருகில் இருந்து சிப்ஸ் சாப்பிட்டு கொண்டே டிஎஸ்கே வை கிண்டல் அடிக்கின்றனர். இந்த டிக்டாக் பெரிய அளவில் டிரெண்டாகி உள்ளது.

இதுமட்டுமின்றி தனது டிக்டாக்கில் தன் கணவரை கிண்டலடித்தும் வெறுப்பேற்றியும் தொடர்ந்து பல டிக்டாக்குகளை செய்து வருகிறார் நிஷா. இதில் இவரது கணவர் சமைக்க அருகில் அமர்ந்து கிண்டலடித்து பல வீடியோக்களை வெளியிட்டிருக்கிறார். இந்த வீடியோக்கள் அனைத்தும் டிக்டாக் முதல் பல சமூக வலைத்தளங்களில் டிரெண்டாகி வருகிறது.

Aranthangi nisha and her husbands viral and famous tiktok video

அறந்தாங்கி நிஷாவின் வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் காணொளிகள் பல லட்சம் பார்வையாளர்களை எளிதில் சென்றடைந்து விடுகின்றது. அதற்கு காரணம் விஜய் தொலைகாட்சி மூலம் பிரபலமடைந்ததே ஆகும். தற்போது தொலைகாட்சிகளில் வந்து நகைச்சுவை செய்து ரசிகர்களை நிஷாவால் சிரிக்க வைக்க முடியாததால் தன் வீட்டில் இருந்த படியே சிரிக்க வைத்து வருவது ரசிகர்களின் பாராட்டை பெற்று தந்திருக்கிறது.

Aranthangi nisha and her husbands viral and famous tiktok video

நிஷாவின் இந்த ஜாலியான டிக்டாக்குகளை தவிர்த்து அறந்தாங்கி நிஷா சமூக வலைத்தளங்களில் பதிவிடும் பல நகைச்சுவையான விஷயங்களுக்கும் ரசிகர்களிடையே நல்ல ஆதரவை கொடுத்து வருகின்றனர். இதனால் தொடர்ந்து ஆக்டிவ்வாக இருந்து வரும் நிஷா தன் கணவருடன் தொடர்ந்து பல சேட்டைகளை செய்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X