ஜாலியாய் பிறந்தநாளை கொண்டாடிய அறந்தாங்கி நிஷா.. கடைசியில இப்படி முடிஞ்சுடுச்சே!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் படு ஜாலியாக பிறந்தநாளை கொண்டாடிய நிஷா கடைசியில் மொத்த ஹவுஸ்மேட்ஸையும் அழ வைத்து விட்டார்.
Recommended Video
இந்த சீசினில் முதல் முறையாக பிறந்தநாளை கொண்டாடியிருக்கிறார் ஸ்டாண்ட் அப் காமெடி ஆர்ட்டிஸ்ட்டான அறந்தாங்கி நிஷா.
தனக்கு இன்று பிறந்த நாள், ஆனால் யாருக்கும் சொல்லலை எனக்கு நானே சொல்லிக் கொள்கிறேன் என்று கேமரா முன்பு நின்று காமெடியாக தனக்கு வாழ்த்து சொல்லிக் கொண்டார்.

நிஷா கதறல்
இதனை , ரியோவை கன்ஃபெஷன் ரூமூக்கு அழைத்த பிக்பாஸ் நிஷாவின் பிறந்தநாள் கேக்கை கொடுத்தனுப்பினார். கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடும் நிஷா, தன்னுடைய அம்மாவை ரொம்பவே மிஸ் பண்ணுவதாக கூறி கதறி அழுகிறார்.

வீட்டில் வீடியோ
அவருக்கு முத்தம் கொடுத்து வாழ்த்து சொல்லும் ஹவுஸ்மேட்ஸ், பலரும் அழாமல் இருக்குமாறு ஆறுதல் கூறினர். அப்போது பாப்பாவை மட்டும் காட்டச்சொல்லுங்கள் என்றார் நிஷா. உடனே பிக்பாஸ், நிஷாவின் அம்மா, அவரது கைக் குழந்தையை மடியில் வைத்தப்படி இருக்கும் வீடியோ பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் டிவியில் ஒளிபரப்பட்டது.

டிவிக்கு முத்தம்
அப்போது பேசிய அவரது அம்மா, நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன் என உருக்கமாக பேசினார். அதனை பார்த்து எமோஷனலான நிஷா, டிவியிலேயே போய் தனது குழந்தைக்கு முத்தம் கொடுத்து தனது தாய்மையை வெளிப்படுத்தினார்.

செலிபிரேஷன் சென்டிமென்ட்
நிஷா எமோஷனலாகி பேசுவதையும் அழுவதையும் பார்த்த சக ஹவுஸ்மேட்ஸ்களும் கண்ணீர் விட்டனர். செலிபிரேஷன் சென்டிமென்ட், சண்டைகள் என இன்றைய எபிசோடும் களைக்கட்டியது.


Click it and Unblock the Notifications











