லவ் யூ மச்சான்.. கல்யாண நாளில் கணவருக்காக கண் கலங்கிய அறந்தாங்கி நிஷா.. வாழ்த்து சொன்ன கமல்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள அறந்தாங்கி நிஷா தனது திருமண நாளை முன்னிட்டு கேமரா மூலம் தனது கணவரிடம் உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார்.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி என்டெர்டெய்ன்மென்டாக உள்ளது என்றால் அது அறந்தாங்கி நிஷாவால் தான்.
அந்த அளவுக்கு தன்னையும் கலாய்த்துக்கொண்டு மற்றவர்களையும் கலாய்த்து டைம் பாஸ் செய்து வருகிறார்.

கல்யாண நாள்
ஏற்கனவே கடந்து வந்த பாதை டாஸ்க்கில் தனது குழந்தைக்கு ஏற்பட்ட விபத்தை கூறி கண்கலங்கினார் நிஷா. இந்நிலையில் இன்று தனது கல்யாண நாளை கொண்டாடும் நிஷா கேமரா முன்பு தனது கணவர் குறித்து உருக்கமாக பேசி கண்ணீர் விட்டார்.

நல்லா பார்த்துப்பேன்
தான் காட்டிய அன்பு அக்கறையை விட 100 மடங்கு அதிகமான அன்பையும் அக்கறையையும் கொடுத்துள்ளீர்கள். இந்த பிரிவு உடலால் மட்டும் தானே தவிர மனதால் இல்லை என்றும் கூறினார். மேலும் உங்களின் அப்பா மற்றும் அம்மாவுக்கு அடுத்து நான் நல்லபடியாக பார்த்து கொள்வேன்.

கமல் வாழ்த்து
நம் குழந்தைகளும் உங்களை நல்லபடியாக பார்த்துக் கொள்வார்கள் என்று கூறினார். தொடர்ந்து தனது கணவருக்கு லவ் யூ மச்சான் என திருமண நாள் வாழ்த்து கூறினார் அறந்தாங்கி நிஷா. பின்னர் அகம் டிவி வழியாக போட்டியாளர்களை சந்தித்த கமல், நிஷாவுக்கு திருமண நாள் வாழ்த்துக்களை கூறினார்.

முடித்ததுமே சிரித்தீர்கள்
மேலும் நிஷா கடந்து வந்த பாதை டாஸ்க்கின் போது பேசியது குறித்தும் கலந்துரையாடினார் கமல். அப்போது அந்த விஷயத்தில் இருந்து வெளியே வந்த விட்டீர்கள் என்பது, அதை சொல்லி முடித்ததுமே சிரித்தீர்கள் அதிலேயே தெரிகிறது என்றார்.

நிஷாவுக்கு பாராட்டு
மேலும் நிறம் குறித்து பேசியது குறித்தும் பாராட்டிய கமல், இந்தியால் இந்த பேச்சு அதிகம் உள்ளது. அம்மாவே தனது மகள்களில் கலராக இருப்பவர் குறித்து பேசுவதை பார்த்திருப்போம் என எடுத்துக்காட்டு கூறி, நீங்கள் கடந்து வந்து விட்டீர்கள் என பாராட்டினார்.


Click it and Unblock the Notifications











