மாரி 2 பட இயக்குநர் மீது செம கடுப்பில் ‘அறந்தாங்கி’ நிஷா.. காரணம் தனுஷ்!
Recommended Video

சென்னை: மாரி 2 இயக்குனர் பாலாஜி மோகன் மீது தான் வருத்தத்தில் இருப்பதாக காமெடி நடிகை அறந்தாங்கி நிஷா தெரிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் படம் மாரி 2. இதில் தனுஷுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார். வரலட்சுமி, டோவினோ தாமஸ், அறந்தாங்கி நிஷா, ரோபோ சங்கர், கல்லூரி விநோத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படம் வரும் 21ம் தேதி திரைக்கு வருகிறது. இதையொட்டி படக்குழுவினர் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய அறந்தாங்கி நிஷா, படத்தின் இயக்குனர் பாலாஜி மோகன் மீது தான் வருத்தத்தில் இருப்பதாகக் கூறினார்.

தனுஷ் தான் காரணம்:
"சின்னத்திரையில் இருந்த என்னை வெள்ளித்திரைக்கு அழைத்து வந்தவர் தனுஷ் தான். அதற்காக நான் அவருக்கு நன்றி சொல்லிக்கொள்கிறேன்.

வருத்தம்:
இந்த படத்தில் நான் 2வது ஹீரோயினாக நடித்துள்ளேன். ஆனாலும் எனக்கு தனுஷுடன் ஒரு டூயட் பாடல் வைக்காதது வருத்தம் தான். சாய் பல்லவிக்கு ஒரு கறிக்கொழம்பு பாட்டு மாதிரி எனக்கொரு கோழிக்கொழம்பு பாட்டு வெச்சிருக்கலாம்.

நானும், சாய் பல்லவியும்:
சாய் பல்லவி ஒரு ஷார்டுக்கு கூட மேக்கப் போடவில்லை. நான் ஒரு ஷார்டுக்கு கூட மேக்கப் போடாமல் இருக்கவில்லை. நானும் அவரும் அமாவாசை, பெளர்ணமி மாதிரி இருக்கும்.

பாலாஜி மோகன்:
இயக்குனர் பாலாஜி மோகனை முதலில் பார்த்தபோது பால்வாடிக்கு முதல் நாள் வந்த குழந்தை மாதிரி இருந்தார். அவ்வளவு அமைதியானவர். யாருடைய மனமும் கோணாமல் எங்களை பார்த்துக்கொண்டார்", என அவர் கூறினார்.


Click it and Unblock the Notifications











