இவங்க இல்லன்னா இந்த பிக்பாஸ் சீசன் செம மொக்கையாயிடும்.. அறந்தாங்கி நிஷாவின் அட்ராசிட்டிஸ்!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறந்தாங்கி நிஷா டைமிங்கில் கொடுக்கும் கவுண்டர்களும் அட்ராசிட்டிகளும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி பெரும் இழுபறிக்கு பின்னர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் பெரும்பாலும் விஜய் டிவி புராடெக்ட்டுகளே பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்தமுறை கடந்த சீசனை போன்று பெரிதாக சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போட்டியாளர்கள் இல்லை என புலம்பி வருகின்றனர் நெட்டிசன்கள்.

அறந்தாங்கி நிஷா
இதனால் நிகழ்ச்சியின் சுவாரசியமும் குறைவாகத்தான் இருக்கும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் ஸ்டாண்டப் காமெடி ஆர்ட்டிஸ்ட்டான அறந்தாங்கி நிஷா, தனது ஸ்பான்டனியஸ் கவுண்டர்களால் நிகழ்ச்சியை போரடிக்காமல் கொண்டு செல்கிறார்.

கேமராவிடம் புரபோஸ்
குறிப்பாக நேற்றைய எபிசோடில் அதிகமாக ஸ்கோர் செய்தது அறந்தாங்கி நிஷாதான். முதலில் அந்த கார்னரில் இருந்த கேமராவை காதலிப்பதாக கூறி அட்டகாசம் செய்தார். இத்தனை முறை காதலிக்கிறேன் என்கிறேனே உங்களுக்கு என் மீது காதல் வரவில்லையா என ஏக்கத்துடன் கேட்டார்.

நிஷாவை காதலிக்கும் கேமரா
பின்னர் கேமராவிடம் நீங்கள் என்னை காதலிக்கிறீர்கள் என்றால் தலையை மேலும் கீழும் அசையுங்கள் இல்லை என்றால் இடப்பக்கமும் வலப்பக்கமும் அசையுங்கள் என்றார். சற்று நேரம் அமைதியாகவே இருந்த கேமரா பின்னர் மேலும் கீழுமாய் அசைந்து நிஷாவை காதலிப்பதாக தெரிவித்தது.

வச்சு செய்தார்
இதனால் பரவசமடைந்தார் நிஷா. மேலும் எப்படி ஃபோகஸ் செய்தாலும் ஓகே ஆனால் ஜூம் மட்டும் வேண்டாம் என்று பிள்ளை குட்டிகள் பயந்துவிடுவார்கள் என தன்னை தானே டேமேஜ் செய்துக் கொண்டார். தொடர்ந்து நடிகை ரேகாவை வச்சு செய்துவிட்டார்.

கொடுத்துவிடுவார்கள்
ரேகா தன்னுடைய மெட்டி மற்றும் சில காஸ்மெட்டிக்ஸ்களை காணவில்லை என்று கூற காலையில் இருந்து என்னை படுத்திவிட்டார், என்னால் தாங்க முடியவில்லை என்றார். மேலும் கேமராவிடம் சொல்லி விட்டால் கொடுத்துவிடுவார்கள் என்றும் ரேகாவிடம் கூறினார்.

கூட்டிக்கொண்டு போ
ஆனால் ரேகா, அந்த கேமராதான் உன்னை காதலிக்குதே கேட்டு வாங்கிக்கொடு என்றார். அதற்கு கேமராவை பார்த்து எப்படியாவது உன்னோடு கூட்டிக்கொண்டு போய்விடு என்றார் நிஷா. உடனே ரேகா, காலையில் இருந்து பேசிக்கொண்டே இருக்கிறாய் என்றார்.

அவங்கள கூட பாக்குது
அதற்கு யாரு நான் காலையிலேருந்து பேசுறேன்.. நீங்க மவுன அஞ்சலில இருக்கீங்க என்று சிக்ஸர் அடித்தார். பல கவுண்டர்களை வரிசையாக கொடுத்தார் நிஷா, அதாவர் இந்த கேமரா ரேகா மேடத்த கூட பாக்குது, ஆனா என்ன பாக்கல என்றார். மேலும் பிக்பாஸ் டார்ச்சர் பண்ணி பாத்ருப்பீங்க ஆனா பிக்பாஸயே டார்ச்சர் பண்ணி இப்போதான் பாக்றீங்க.. என்று ரேகாவை வாரினார்.

எங்களை கொல்லனுமே
மேலும் 6 மாசமா அவரை பண்ணிய டார்ச்சரில் கிளம்பு என விரட்டி விட்டுவிட்டார் என்று ரேகா கணவரையும் இழுத்தார் நிஷா. அதற்கு பதில் அளித்த ரேகா ஆமாம் ஆமாம் உங்க மாமாவும் அப்படிதானே அனுப்பினார் என்று கூறி என் வீட்டுக்காரர் சீக்கிரம் வந்துவிடாதே என்ற சொல்லியுள்ளார் என்றார். அதற்கு ஆமாம் எங்களை கொல்லனுமே என்றார் நிஷா.

மனம் நோகாதப்படி
இதேபோல் புரோக்கன் ஹார்ட்டை கொடுத்த போதும் ஹவுஸ்மேட்ஸ்களின் மனம் நோகாதப்படி நடந்துகொண்டார். தனக்கு ரேகா உடைந்த இதயத்தை கொடுத்த போதும் பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் காமெடி செய்தார். விளையாட்டின் போது தடுக்கி விழுந்த போதும் வலிக்கவில்லை என சகஜமாக கூறி பெரிது படுத்தாமல் மீண்டும் விளையாட்டை தொடங்கினார் நிஷா. இப்படி ஒவ்வொரு இடத்திலும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டார் நிஷா.


Click it and Unblock the Notifications











