அழகானவ சாதிச்சதை விட.. அவமானப்பட்டவ சாதிச்சது தான் அதிகம்.. 4வது புரமோவில் கண் கலங்க வைத்த நிஷா!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4வது புரமோ தற்போத் வெளியாகி பலரையும் கண் கலங்க வைத்துள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் சற்று நேரத்தில் ஆரம்பமாக உள்ள நிலையில், அடுத்த புரமோவை விஜய் டிவி திடீரென வெளியிட்டுள்ளது.
2வது புரமோவில் அனிதா சம்பத் கண்ணீர் விட்டு அழுத நிலையில், 4வது புரமோவில் நிஷா ஸ்கோர் செய்துள்ளார்.

நேத்தே போட்டாச்சு
இன்று வெளியான புரமோவை பார்த்த ரசிகர்கள், இதுதான் நேத்தே போட்டு டெலிட் பண்ணிட்டீங்களே.. நாங்களாம் பார்த்தாச்சு புதுசா ஏதாவது புரமோ போடுங்க என பிக் பாஸுக்கே ஆர்டர் போட்டுள்ளனர் பல ரசிக பாஸ்கள். ஷிவானிக்கு நடிகர் ஆரி, பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோர் ஆறுதல் சொல்லும் விதமாக முதல் புரமோ வெளியாகி இருந்தது.

அம்மாவை பற்றி அனிதா சம்பத்
நேற்று சட்டென பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த நிலையில், அதன் தொடர்ச்சியான புரோக்கன் ஹார்ட் எபிசோட் இன்றும் தொடர்கிறது. செய்திவாசிப்பாளர் அனிதா சம்பத், நிஷாவுக்கு ஹார்ட் கொடுக்கும் போது, தனது அம்மா நிறமும் கருப்புத் தான், நிறத்தை பார்த்து பின்னடைவு கொள்ளாமல் அறந்தாங்கி நிஷா அக்கா முன்னேறி செல்வது இன்ஸ்பயர் ஆக உள்ளது என கண்ணீர் சிந்த, அவரை ஆரத் தழுவிக் கொண்டார் நிஷா.

செம சண்டை
பொதுவா செய்தியாளர்கள்கிட்ட பேசமாட்டேன். பேசினா எச்சில் தெறிக்கும் படி பேசுவார்கள் என 'மொட்டை தலை' சுரேஷ் சக்கரவர்த்தி சொல்ல, கடுப்பான அனிதா சம்பத், அவருடன் சண்டைக்கு செல்லும் 3வது புரமோ, இன்னைக்கும் தரமான சம்பவம் இருக்கு என எதிர்பார்க்க வைத்துள்ளது. சுரேஷ் சக்கரவர்த்தியை ஷிவானி ஆர்மியினர் நேற்று திட்டித் தீர்த்த நிலையில், இன்று காலை முதலே அனிதா ஆர்மியினர் அடித்து துவைத்து வருகின்றனர்.

எல்லோரையும் அழ வைத்த நிஷா
ஸ்டாண்ட் அப் காமெடியையான அறந்தாங்கி நிஷா, தற்போது வெளியாகி உள்ள 4வது புரமோவில் குழந்தைக்கு தன்னால் விபத்து நேர்ந்த சோகக் கதையை கூறி அனைவரையும் அழ வைத்துள்ளார். அவர் என்ன கதையை கூறுகிறார், ஒவ்வொரு பிரபலங்களும் தங்கள் சொந்தக் கதை சோகக் கதைகளை நாளைக்கும் சொல்வார்கள் என இதன் மூலம் தெரிகிறது.

அவமானப்பட்டவ சாதிப்பா
என்னோட வொர்க்க அவ்வளவு லவ் பண்ணேன் அதனால, பாப்பாவுக்கு செங்கல்பட்டு கிட்ட ஆக்சிடன்ட் ஆகிடுச்சு என சொல்லி கண்ணீர் சிந்தும் அவரை பார்த்து அனைவரும் அழுகின்றனர். அதன் பின்னர், இந்த உலகத்துல அழகா இருக்கவன் சாதிக்கிறதை விட, அவமானப்பட்டவன் தான் அதிகமா சாதிச்சு இருக்கான். நான் அதிகமா அவமானப்பட்டு இருக்கேன் நான் சாதிச்சிக்கிட்டே இருப்பேன்.. யாரும் எந்த இடத்துலயும் துவண்டு போயிடாதீங்க எனக் கூறும் அட்டகாசமான புரமோ வெளியாகி உள்ளது.


Click it and Unblock the Notifications











