ஜாலி டூர் அடிக்கும் அறந்தாங்கி நிஷா.. குடும்பத்துடன் சூப்பர் போஸ்… வைரலாகும் புகைப்படம்!

சென்னை : அறந்தாங்கி நிஷா, தனது அன்பான குடும்ப உறவுகளுடன் ஜாலியான டூர் போய்யுள்ளார்.

அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அக்கா எங்க டூர் போறீங்க என்று கேள்வி கேட்டு அந்த புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர்.

என்ட்ரி

என்ட்ரி

விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் என்ட்ரி கொடுத்தவர் அறந்தாங்கி நிஷா. பெண்களுக்கு காமெடி சாத்தியமாகுமா என்கிற கேள்வியை உடைத்துச் அதை திறன்பட செய்து சாதித்து காட்டினார் நிஷா.

படங்களில்

படங்களில்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் கிடைத்த பிரபலத்தின் மூலம் நிஷாவுக்கு சினிமா வாய்ப்பும் கிடைத்தது. விஷால் நடித்த இரும்புத்திரை, நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, தனுஷ் நடித்த மாரி 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்

பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில்

கலக்கப்போவது யாரு சீசன் 5 நிகழ்ச்சியில் ரன்னர் அப் பட்டத்தைக் கைப்பற்றினார். பின்னர், விஜய் டி.வியில் கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் கலகலப்பாக இருந்த நிஷா. அர்ச்சனாவின் வரவுக்கு பிறகு சர்ச்சையில் சிக்கினார். தற்போது பிபி ஜோடி நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார்.

ஜாலி டூர்

ஜாலி டூர்

இந்நிலையில், அறந்தாங்கி நிஷா தனது குடும்பத்துடன் ஜாலியாக ராமேஸ்வரத்திற்கு டூர் போய் உள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குடும்பத்தாருடன் படகில் சென்ற வீடியோ பதிவிட்டுள்ளார். மேலும் அதில், நான் சந்தோஷமாக இருக்கிற ஒரே இடம் அம்மா மட்டும்தான்,கடல் தாயை பார்ப்பதற்காக என் தாயோடு ஒரு பயணம் என பதிவிட்டுள்ளார். ரசிகர்கள் பலரும் இதற்கு லைக் கொடுத்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X