twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும்.. குடும்பம்னா பிரச்சனை இருக்கும்.. பொளந்துக்கட்டிய அறந்தாங்கி நிஷா!

    |

    சென்னை: அறந்தாங்கி நிஷாவுக்கு பட்டி மன்றம் ஒன்றும் புதிதில்லை என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடைபெற்ற பட்டி மன்ற டாஸ்க்கில் பட்டைய கிளப்பினார்.

    பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடில் பிக்பாஸ் வீட்டில் பெரிய பிரச்சனை இல்லாவிட்டாலும் சிறுசிறு பிரச்சனைகள் இருந்தன.

    இதனிடையே பிக்பாஸ் வீட்டில் நேற்று சிறப்பு பட்டி மன்றம் நடத்தப்பட்டது. இதில் பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்றும் பிக்பாஸ் வீடு ஒரு போட்டிக்களம் என்றும் தலைப்பு கொடுக்கப்பட்டது.

    உங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ!உங்க மைண்ட்லதான் குரூப்பிஸம் இருக்கு.. வச்சு செய்த ரம்யா.. பஞ்சாயத்து பண்ணப்போய் பஞ்சரான ரியோ!

    எதுகை மோனை

    எதுகை மோனை

    இதில் பிக்பாஸ் வீடு ஒரு ஆனந்த குடும்பம் என்ற தலைப்பில் பேசினார் அறந்தாங்கி நிஷா. அறிஞர் அண்ணாவின் வார்த்தையுடன் பட்டி மன்றத்தை தொடங்கிய நிஷா, கோவில்ன்னா அர்ச்சனை இருக்கும், குடும்பம்னா பிரச்சனை இருக்கும் என எதுகை மோனையில் பேசினார்.

    செருப்பால அடிப்பங்க

    செருப்பால அடிப்பங்க

    தொடர்ந்து புறணி பேசுவது அழகு என்று கூறிய நிஷா, ஒருவருடைய உள்ளத்தையும் உருவத்தையும் உடைக்கும் போதுதான் அந்த புறணி அசிங்கம். அந்த புறணியை வெளியே இருக்குறவங்க செருப்பால அடிப்பாங்க

    மக்களுக்கு புரியும்

    மக்களுக்கு புரியும்

    உனக்கு பிடித்தவரை பற்றி தப்பா பேசும் போது அதை பார்ப்பவன் திட்டுகிறான். குடும்பத்தில் சண்டை வேண்டும் போட்டி வேண்டும். சண்டையும் சந்தோஷமும் சேர்ந்ததுதான் குடும்பம் என்று மக்களுக்கு புரியும்.

    சுகம்தான்

    சுகம்தான்

    24 மணி நேரமும் சிரிச்சுக்கிட்டே இருந்தால் அவனுக்கு பெயர் இளிச்சவாயன். போபமும் இருக்கனும், அப்பப்ப வரனும். கோபம் இருக்கும் இடத்தில் தான் குணம் இருக்கும்.
    தாங்கிப்பிடிதற்கு கரம் இருந்தால் தடுக்கி விழுவதும் ஒரு சுகம் தான். தோள் கொடுப்பதற்கு தோழன் இருந்தால் தேம்பி அழுவதும் சுகம்தான்.

    விட்டுக்கொடுக்காதீர்கள்

    விட்டுக்கொடுக்காதீர்கள்

    உணர்வுபூர்வமான வலி எடுக்கும்போது உடன் பிறந்தவன் இருந்தால் வலி கூட ஒரு சுகம்தான். ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மை இருந்தால் போட்டி கூட ஒரு சுகம்தான்.
    அன்பான குடும்பத்தில் இருந்து போட்டி போடுங்கள் ஆனால் குடும்பத்தில் இருப்பவர்களை விட்டுக்கொடுக்காதீர்கள்.. இவ்வாறு பேசி பொளந்து கட்டினார் அறந்தாங்கி நிஷா.

    English summary
    Aranthangi Nisha speech was amazing in Patti Mandram. She said Biggboss house is a happy family.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X