விஜய் டிவியின் பெண் பிரபலத்திற்கு குழந்தை பிறந்துடுச்சாம்.. என்ன குழந்தை.. எப்போன்னு பாருங்க!

சென்னை: நிறைமாத கர்ப்பிணியாக இருந்த விஜய் டிவி பிரபலமான அறந்தாங்கி நிஷாவுக்கு குழந்தை பிறந்துள்ளது.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் அறந்தாங்கி நிஷா. இவர் ராமர் மற்றும் பழனி ஆகியோருடன் இணைந்து செய்த காமெடி நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கோவில் விழாக்கள் மற்றும் பொது மேடைகளில் காமெடி நிகழ்ச்சிகளை நடத்தி பெரும் பிரபலமானார் நிஷா. அரது நகைச்சுவை திறமையால் சினிமாவில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்தது.

விஜய் டிவியில்

விஜய் டிவியில்

ஏற்கனவே ஒரு ஆண் குழந்தை உள்ள நிலையில் அறந்தாங்கி நிஷா மீண்டும் கர்ப்பமானார். கர்ப்பிணியாக இருந்த நிஷா விஜய் தொலைக்காட்சிகளில் தொடர்ந்து நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார்.

போட்டோக்கள் வைரல்

போட்டோக்கள் வைரல்

இந்நிலையில் கர்ப்பமாக இருந்த நிஷாவுக்கு சமீபத்தில் வளைகாப்பு நடந்தது. அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

பெண் குழந்தை

பெண் குழந்தை

இந்நிலையில் பிரசவ வலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிஷாவுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. குழந்தைக்கு சஃபா ரியாஸ் என பெயர் வைத்திருப்பதாக நிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

பாப்பா பேரு

பாப்பா பேரு

இதுதொடர்பான அவரது பதிவில் "எல்லாருக்கும் வணக்கம், எனக்கு பெண் குழந்தை பொறந்துருச்சு.. பாப்பாவின் பெயர் சஃபா ரியாஸ் என்று வச்சுருக்கோம். எல்லோரட பிளஸ்ஸிங்கும் கண்டிப்பா அவளுக்கு வேண்டும்" என தெரிவித்துள்ளார்.

நிஷாவுக்கு வாழ்த்து

நிஷாவுக்கு வாழ்த்து

ஏற்கனவே ஆண் குழந்தை உள்ள நிலையில் நிஷாவுக்கு அவர் எதிர்பார்த்தது போலவே தற்போது பெண் குழந்தை பிறந்திருப்பது இரட்டிப்பு மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறதாம். பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ள அறந்தாங்கி நிஷாவுக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X