என்ன குமாரு அப்படி ஆகிப்போச்சு.. அரசன் படத்திலிருந்து விலகினாரா விஜய்சேதுபதி?

சென்னை: வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் 'அரசன்' படத்தில் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடிப்பதாக இருந்தது. ஆனால், தற்போது அந்த கதாபாத்திரத்தில் அவர் நடிக்கவில்லை, அவருக்கு பதிலாக தெலுங்கு நடிகர் ராணா டகுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வெற்றிமாறன் தனுஷ், விஜய்சேதுபதியை வைத்து பல வெற்றிப்படங்களை கொடுத்து இருந்தாலும், அரசன் படத்தின் மூலம் முதன் முதலாக இணைந்துள்ளனர். வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படம், வடசென்னை யுனிவர்ஸின் கதைகளுள் ஒன்று என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தினை கலைப்புலி எஸ்.தாணு தயாரிக்கிறார். அரசன் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டிசம்பர் மாதம் மதுரை மற்றும் கோவில்பட்டியில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னையில் அரங்குகளில் படப்பிடிப்பு தொடங்கப்படும் உள்ளன.

Arasan Simbu Vijay Sethupathi

அரசன்: பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இந்த படத்திற்காக சிம்பு, இளமையான தோற்றத்திலும், நடுத்தர வயதானவரின் தோற்றத்திலும் நடிக்கிறார். இளமை தோற்றம் க்ளீன் ஷேவ் செய்து கபடி வீரராக வருகிறார். நடுத்தர வயது தோற்றத்திற்கு தாடி மீசையுடனும் சிம்புவின் நியூ லுக் போட்டோஸ் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

விஜய்சேதுபதி: இப்படத்தில் விஜய்சேதுபதி, இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஒரு விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஜய் சேதுபதி, அரசன் படத்தில் தனது கதாபாத்திரத்தை பற்றி பேசினார். அதில், அரசன் படத்தில் எனது கதாபாத்திரத்தை பற்றி எனக்கே தெரியாது. ஒரு கதாபாத்திரத்தை எழுதும்போது, வெற்றிமாறன் சாருக்கு நான் நியாபகம் வந்ததாக சொன்னார். அதை என்னிடம் சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன். வெற்றிமாறன் சாருடன் வேலை செய்யும்போது நிறைய விஷயத்தை கற்றுக்கொள்ள முடியும். படப்பிடிப்பு எத்தனை நாட்கள் இருக்கும் எனக்கு தெரியாது என்று விஜய்சேதுபதி கூறியிருந்ததார்.

ரசிகர்கள் கவலை: ஆனால், தற்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, தேதிகள் ஒத்துப்போகாததால் இந்த படத்தில் இருந்து விலகி விட்டதாக கூறப்படுகிறது. படக்குழுவினர் விஜய் சேதுபதிக்காக கிட்டத்தட்ட 15 நாட்கள் காத்திருந்தனர். ஆனால், தேதிகள் கிடைக்காததால், அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் ராணா டகுபதியை நடிக்க வைக்க படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அரசன் படத்தை எந்தளவிற்கு விரைவாக ஷூட்டிங்கை முடிக்க முடியுமோ அந்தளவிற்கு விரைவாக முடித்து படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தான் படக்குழு இப்படி ஒரு முடிவை எடுத்து இருப்பதாக கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X