அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா.... சுதந்திர தின செய்தி சொல்லும் படக்குழு!

விரைவில் வெளிவர இருக்கும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்.

சென்னை: முழுக்க முழுக்க நகைச்சுவை படமாக உருவாகியுள்ளது அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா திரைப்படம்.

ஆரா சினிமாஸ் மகேஷ் கோவிந்தராஜ் தயாரிப்பில், அவினாஷ் ஹரிஹரன் இயக்கியுள்ள திரைப்படம் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா. வீரா, மாளவிகா நாயர், பசுபதி, ரோபோ ஷங்கர் மற்றும் பல நடிகர்கள் இந்த படத்தில் நடித்திருக்கிறார்கள். ஜலந்தர் வாசன் ஒளிப்பதிவு செய்ய, மேட்லி ப்ளூஸ் இந்த படத்துக்கு இசையமைத்திருக்கிறார்.

Arasiyalla Idhellam Saadharnamappa team is happy

சூரியன் படத்தில் கவுண்டமணி பேசும் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா என்ற வசனம் மிகவும் பிரபலமானது.அதையே இந்த படத்தின் தலைப்பாக வைத்திருக்கிறார் இயக்குனர் அவினாஷ் ஹரிஹரன். இது ஒரு முழு நீள காமெடி படம் என்பதால் இந்த தலைப்பை வைத்ததாக கூறுகிறார் இயக்குனர்.

அவர் மேலும் கூறியதாவது, "நான் மிக நீண்ட காலமாக தொலைக்காட்சி விளம்பரங்களை தயாரித்துக் கொண்டிருந்தேன். ராஜதந்திரம் படத்தின் விளம்பரப் பாடல் நிகழ்ச்சியில் முதன்முறையாக வீராவும் நானும் சந்தித்தோம். அங்கு தான் அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பாவின் அடிப்படை கருத்தாக்கம் தோன்றியது. முழுமையான கதையை உருவாக்கியவுடன், படத்துக்கு ஒரு தயாரிப்பாளரை தேடும் மிகப்பெரிய பணியில் ஈடுபட்டோம். கதையை கேட்டு உடனடியாக ஒப்புக் கொண்ட மகேஷ் சாருக்கு நன்றி.

இது பல்வேறு கதாபாத்திரங்களை உள்ளடக்கிய முழு நீள காமெடி திரைப்படம். பாண்டிச்சேரியை சேர்ந்த ஒரு புகைப்படக் கலைஞர், சென்னையை சேர்ந்த திருமண ஒருங்கிணைப்பாளர் மற்றும் மும்பையை சேர்ந்த அடியாள் ஆகியோர் தங்கள் தொழிலில் மீண்டும் மேலே வரும் நோக்கில் இருக்கும் போது, ஒரு அரசியல்வாதியால் ஏற்படும் குழப்பத்தால் என்ன ஆகிறார்கள் என்பதை சொல்கிறது" என்றார்.

நடிகர் வீரா இது பற்றி கூறும்போது, "ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தில் முதன்மையானவர் ஹீரோ. அந்த ஹீரோவாக என்னை நடிக்க வைக்க ஒப்புக் கொண்டதற்கும், இந்த படத்தை தயாரித்ததற்கும் தயாரிப்பாளர் மகேஷ் அவர்களுக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். மேலும், என் வாழ்க்கையில் முதன்முறையாக ஒரு நகைச்சுவை படத்தில் நடிக்கும் முயற்சியில் ஈடுபடுவதால் நான் மிகவும் பதட்டமாக உணர்கிறேன்" என்றார்.

ரசிகர்களை விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும் வகையில் இந்த படம் உருவாகியிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது. இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்குவதால், படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Read more about: new tamil cinemas
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X