தோழி ஓவியாவுடன் பிறந்தநாளை கொண்டாடிய ஆரவ்
Recommended Video

சென்னை: பிக் பாஸ் பிரபலம் ஆரவ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
பிக் பாஸ் முதல் சீசன் மூலம் பிரபலமானவர் ஆரவ். ஓவியாவுக்கு அவர் கொடுத்த மருத்துவ முத்தத்தை யாரும் இன்னும் மறக்கவில்லை. படங்களில் பிசியாக இருக்கும் ஆரவ் இன்று தனது 30வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அவர் தனது பிறந்தநாளை தான் நடித்து வரும் ராஜபீமா படக்குழுவுடன் கேக் வெட்டி கொண்டாடினார்.
கேக்
ஆரவ் கேக் வெட்டியபோது எடுத்த வீடியோவை ராஜபீமா படத்தை தயாரிக்கும் சுரபி பிலிம்ஸ் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. கேக்கை வெட்டவா விடுறீங்க...

ஓவியா
ஆரவ் பிறந்தநாள் பார்ட்டியில் ஓவியா இல்லாமலா. ஆரவின் நெருங்கிய தோழியான ஓவியா பார்ட்டியில் கலந்து கொண்டு ஆரவை வாழ்த்தினார்.
சுஜா வருணி
அக்கா சுஜா வருணி தம்பி ஆரவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியதுடன் அறிவுரையும் வழங்கியுள்ளார்.
ரசிகைகள்
பிக் பாஸ் 2 வீட்டிற்கு ஆரவ் வந்தபோது அவருக்கு இந்த அளவுக்கு ரசிகைகளிடையே வரவேற்பு இருக்கும் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. ஆரவை பார்த்து இளம் பெண்கள் மகிழ்ச்சி அடைந்ததை பார்த்த வாலிபர்களோ என்ன கொடுமை சார் இது என்று புலம்பினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











