அப்ப சொன்னது தான் இப்பயும்.. ஓவியாவுடனான உறவில் எந்த மாற்றமும் இல்லை.. ஆரவ் அதிரடி!

ஓவியாவுக்கும் தனக்கும் இடையில் காதல் ஏதும் இல்லை என நடிகர் ஆரவ் தெரிவித்துள்ளார்.

சென்னை: ஓவியா உடனான உறவு குறித்து மீண்டும் மனம் திறந்து பேசியுள்ளார் நடிகர் ஆரவ்.

சைத்தான் உள்ளிட்ட சில படங்களில் நடித்தவர் ஆரவ். பிக் பாஸ் தமிழ் முதல் சீசன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு டைட்டில் வென்றார். அதன் பிறகு ஹீரோவாக நடிக்கத் தொடங்கியுள்ளார்.

Arav explains about his relationship with Oviya

சரண் இயக்கத்தில் ஆரவ் ஹீரோவாக நடித்த மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் திரைப்படம் சமீபத்தில் வெளியானது. ராஜபீமா திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது ஆரவ்வை வெறித்தனமாக காதலித்தார் ஓவியா. ஆனால் ஆரவ் ஓவியாவை காதலிப்பதாகக் கூறவில்லை. இதனால் ஓவியா மனஉளைச்சல் ஏற்பட்டு, தற்கொலைக்கு முயன்றார். எனவே அவர் நிகழச்சியின் பாதியிலேயே வெளியேறினார்.

Arav explains about his relationship with Oviya

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னரும் ஓவியாவும், ஆரவ்வும் ஒன்றாக ஊர் சுற்றும் புகைப்படங்கள், பார்ட்டிகளில் கலந்துகொண்ட புகைப்படங்கள் வெளியாகி வைரலாகின. தங்களுக்குள் காதல் எதுவும் இல்லை என ஆரவ் தொடர்ந்து மறுத்து வருகிறார். ஆனால் ஆரவ் குறித்து ஓவியாவிடம் கேட்கும் போதெல்லாம், வெளிப்படையாக அவர் மறுப்பு எதுவும் தெரிவிப்பதில்லை.

இந்நிலையில் டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு ஆரவ் பேட்டி அளித்துள்ளார். அதில் ஓவியாவுக்கும் தனக்கும் இடையே காதல் எதுவும் இல்லை என தெரிவித்துள்ளார். தான் படங்களில் கவனம் செலுத்தி வருவதாகவும், ஓவியா அவரது சொந்த ஊரில் இருப்பதாகவும் ஆரவ் தெரிவித்துள்ளார்.

ஆரவ்வின் இந்த பேட்டி பிக் பாஸ் ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வொரு சீசனிலும் ஏதாவது ஒரு ஜோடி காதல் லீலைகளை அகங்கேற்றுகிறது. ஆனால் அவை எதுவும் நிகழ்ச்சி முடிந்த பிறகு, தொடர்வதில்லை என்பது தான் நிதர்சனம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X