என்னது சசிகுமார் படத்தில் நான் நடிக்கிறேனா? அது எனக்கே தெரியாதே: ஆரவ் அதிர்ச்சி
சென்னை: சசிகுமார் படத்தில் நடிக்கவில்லை என ஆரவ் தெரிவித்துள்ளர்.
சுந்தரபாண்டியன் திரைப்பட இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் சசிகுமாரை வைத்து இயக்கும் படம் "கொம்பு வச்ச சிங்கம்". கிராமத்து பின்னணி கதையில் தயாராகி வருகிறது.
இத்திரைப்படத்தில் சசிகுமாருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிப்பதாகவும், இவர்களுடன் பிக்பாஸ் புகழ் ஆரவ், யோகி பாபு மற்றும் பலர் நடிப்பதாகவும் தகவல் வெளியானது.

ஆனால் இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவில்லை என மறுத்துள்ளார். அதனைத் தொடர்ந்துஆரவும், கொம்பு வச்ச சிங்கம் திரைப்படத்தில் தான் நடிக்கவில்லை எனவும், அப்படம் தொடர்பாக யாரும் தன்னை அணுகவில்லை எனவும் கூறியுள்ளார்.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாமி 2 திரைப்படம் ரிலீஸாகியுள்ளது. அடுத்ததாக சண்டக்கோழி 2, சர்கார் என பல படங்கள் வரிசை கட்டி நிற்கின்றன.
பிக்பாஸ் சீசன் முடிந்த நேரத்தில் சூட்டோடு சூடாக விளம்பரங்களில் தோன்றிய ஆரவ், இப்போது மீண்டும் வா அருகில் வா மற்றும் ராஜா பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











