லிப்லாக் முத்தம்.. அதிரடி ஆக்‌ஷன்.. வசூல்ராஜாவை ஞாபகப்படுத்தும் ஆரவ்வின் மார்க்கெட் ராஜா டீசர்!

ஆரவ் நடித்துள்ள மார்க்கெட் ராஜா எம்பிபிஎஸ் டீசர் வெளியாகியுள்ளது.

சென்னை: பிக் பாஸ் முதல் சீசன் டைட்டில் வின்னர் ஆரவ் நாயகனாக நடித்துள்ள மார்க்கெட் ராஜா படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 3 பரபரப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் முதல் சீசனில் டைட்டிலை வென்ற ஆரவ் நாயகனாக நடித்துள்ள மார்க்கெட் ராஜா படத்தின் டீசர் நேற்று வெளியாகியுள்ளது. காதல் மன்னன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அமர்க்களம் உள்ளிட்ட வெற்றிப்படங்களைத் தந்த சரண் இப்படத்தை இயக்கியுள்ளார்.

Aravs MARKET RAJA MBBS teaser released

இப்படத்தில் ராதிகா சரத்குமார், காவ்யா தாப்பர், நிகேஷா படேல், ரோகிணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். மே 1-ம் தேதி உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது.

இந்நிலையில், நேற்று இப்படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். அதில் ஆரவ் டாக்டராக வருவது போலவும், டான் ஆக இருப்பது போலவும் காட்சிகள் கலவையாக இருக்கின்றன. பிக் பாஸ் வீட்டில் மருத்துவ முத்தத்திற்குப் பேர் போன ஆரவ், இதில் லிப் லாக் காட்சியில் நடித்துள்ளார்.

ஒரு காட்சியில், ஆரவ் தன் பெயரை தனுஷ் எனக் கூறுகிறார். உடனே, ராதிகா, 'அப்போ சீக்கிரமே பெரிய இடத்து மாப்பிள்ளை ஆகி விடுவாய்' எனக் கூறுகிறார். இது தவிர டீசரில் காமெடி காட்சிகளும் உள்ளன.

படத்தின் டீசரைப் பார்க்கும் போதே, பல காட்சிகள் வசூல்ராஜா எம்பிபிஎஸ்-ஐ ஞாபகப்படுத்துகின்றன. படமும் அதே போல் காமெடியாக இருக்குமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

More from Filmibeat

Read more about: arav saran ஆரவ் சரண்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X