படையப்பா படத்தில் நடிக்கத் தொடங்கிய அரவிந்த் ஆகாஷ்.. 50 வயதில் திருமணத்தை முடித்தார்!
சென்னை: பஞ்சாப்பில் பிறந்து சினிமா கனவுகளுடன் சென்னைக்கு வந்த நடிகர் அரவிந்த் ஆகாஷ் ரஜினிகாந்த் நடித்த படையப்பா படத்திலேயே க்ரூப் டான்ஸராக நடித்துள்ளார். அதன் பின்னர், கமல்ஹாசனின் ஹே ராம், சூர்யாவின் உயிரிலே கலந்தது உள்ளிட்ட சில படங்களில் அட்மாஸ்பியர் ஆர்ட்டிஸ்ட்டாக நடித்த அரவிந்த் ஆகாஷ் மலையாளத்தில் வெளியான நந்தனம் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார்.
தமிழில் சத்யராஜ் நடித்த சேனா படத்தின் மூலம் அறிமுகமாகி பல படங்களில் நடித்தாலும் வெங்கட் பிரபு இயக்கத்தில் 2007ல் வெளியான சென்னை - 600028 படம் தான் அரவிந்த் ஆகாஷுக்கு அடையாளமாக மாறியது.

சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாஸ் என்கிற மாசிலாமணி, சென்னை - 600028 பார்ட் 2, மாநாடு என தொடர்ந்து வெங்க பிரபு படங்களில் பிரேம்ஜியுடன் போட்டிப் போட்டு அரவிந்த் ஆகாஷும் நடித்து வந்தார். 50 வயதான நிலையில், தற்போது சாரா என்பவருடன் திருமணத்தை முடித்துள்ளார் அரவிந்த் ஆகாஷ்.
50 வயதில் திருமணம்: நடிகர் அரவிந்த் ஆகாஷ் பல வருடங்களாக தமிழ் சினிமாவில் நடித்து வந்தாலும், அவருக்கான தனி அடையாளம் மற்றும் சோலோ வெற்றி என எதுவுமே பெரிதாக கிடைக்கவில்லை. நல்லா அழகாக கலராக இருந்தாலும், தனியாக படங்களை தேர்வு செய்து நடிக்க முயற்சித்தாலும், பெரிதாக ஹிட் கொடுக்கவில்லை. மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர்ஸ் என தமிழ் சினிமாவில் இன்னமும் 50 வயதை நெருங்கிக் கொண்டு ஒரு கூட்டம் உள்ளது. அதில், இருந்து தற்போது மீண்டு, திருமண வாழ்க்கைக்குள் 50 வயதில் அடியெடுத்து வைத்துள்ளார்.

கோவா டூ கோலாலம்பூர்: வெங்கட் பிரபு இயக்கத்தில் சென்னை 28 முதல் கோவா வரை பல படங்களில் நடித்து அசத்திய அரவிந்த் ஆகாஷ் இன்று தனது திருமணத்தை மலேசியாவின் கோலாலம்பூரில் கோலாகலமாக நடத்தி முடித்துள்ளார். அரவிந்த் ஆகாஷ் திருமணத்துக்கு சென்னை 28 கேங்கை சேர்ந்த வெங்கட் பிரபு, பிரேம்ஜி, வைபவ், விஜய் வசந்த் உள்ளிட்ட பலர் கலந்துக் கொண்டு மணமக்களை மனதார வாழ்த்தினர். அதன் புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகி வருகின்றன. அரவிந்த் ஆகாஷ் மற்றும் அவரது மனைவிக்கு பல பிரபலங்களும் ரசிகர்களும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications