twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அரவிந்த் சாமிக்கு ஒரு விருது.. லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா

    |

    சென்னை: கோவாவில் உலக சினிமா திரைப்பட விழா நடைப்பெற்றது. அந்த விழாவில்,நடிகர் அரவிந்த் சாமிக்கு லிஜன்ட் ஆப் தி இந்தியன் சினிமா என்று விருது வழங்கி கெளரவிக்கப்பட்டது. இதில் ரஜினிகாந்த் அவர்களும் கௌரவபடுத்தப்பட்டார்.

    இந்திய உலக சினிமா திரைப்பட விழா 1952லே இந்திய அரசால் நடத்தப்பட்டு வருகிறது. பல நகரங்களில் இந்த விழா தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இப்போது இவ்விழா கோவாவிலே நடைப்பெற்று வருகிறது .

    Aravind Sami was honored with the award

    இதில் நடிகர் அரவிந்த் சாமிக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. 1991ல் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான தளபதி படத்தின் மூலம் அறிமுகமானவர் அரவிந்த் சாமி, கலெக்டர் கதாபாத்திரத்தில் நடித்து மெல்லப்பேசி, முதல் படத்திலேயே அனைவரின் மனதிலும் இடம் பிடித்துவிட்டார்.

    இதையடுத்து, மணிரத்னம் இயக்கத்தில் உருவான ரோஜா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் அரவிந்த் சாமி .கதாநாயகனாக நடித்த முதல் படத்திலேயே இளசுகளின் கனவு நாயகனானார். அதன்பின் மலையாளம், தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் பிசியாக இருந்தார்.

    என் உடல் ஓய்வை கேட்கிறது.. சினிமாவுக்கு முழுக்கு போடும் உச்ச நடிகர்? அதிர்ச்சியில் திரையுலகம்!என் உடல் ஓய்வை கேட்கிறது.. சினிமாவுக்கு முழுக்கு போடும் உச்ச நடிகர்? அதிர்ச்சியில் திரையுலகம்!

    2006க்கு பிறகு அரவிந்த் சாமி படம் ஏதும் நடிக்கவில்லை ,அதையடுத்து 2013ல் கடல் படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி கொடுத்தார் அரவிந்த்சாமி இதுவும் சொல்லும்படியாக இல்லை. அதன் பின் மோகன் ராஜா இயக்கத்தில் உருவான தனி ஒருவன் படத்தின் வில்லனாக நடித்தார்.

    வில்லன் கதாபாத்திரத்தில் தனி ஒருவனாகவே நடித்து தனி முத்திரைப்பதித்தார் அரவிந்த்சாமி. ரீஎன்ட்ரினா இதுதான்டா என்று சொல்லும் அளவுக்கு இருந்தது இவருடைய வில்லன் என்டரி. தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் ஆடி வருகிறார்.

    English summary
    Aravind Sami was honored with the award in Goa film festival.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X