அதிரடி மாற்றங்களுடன் ஏகே 62... அஜித்துடன் மோதும் அரவிந்த் சாமி... ஹீரோயின் லிஸ்ட்டில் இவங்களா?
சென்னை: அஜித்தின் துணிவு திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக திரையரங்குகளில் வெளியாகிறது.
துணிவு படத்தின் ட்ரெய்லர் கடந்த வாரமே வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
இந்தப் படத்தைட் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஏகே 62 படத்தில் நடிக்கவுள்ளார் அஜித்.
லைகா தயாரிக்கும் இந்தப் படத்தில் அஜித்துடன் ஹீரோயின், வில்லனாக நடிப்பது யார் என்ற லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது.

வெறித்தனமான ஆக்சன் ட்ரீட்
நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து 'துணிவு' படத்தில் நடித்து முடித்துள்ளார் அஜித். இந்த மூன்று படங்களையுமே ஹெச் வினோத் இயக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித்துடன் மஞ்சு வாரியர், சமுத்திரகனி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படம் பொங்கலை முன்னிட்டு 11ம் தேதி வெளியாகிறது. துணிவுக்கு போட்டியாக விஜய்யின் வாரிசும் வரும் 11ம் தேதி ரிலீஸாகிறது. இதனிடையே கடந்த வாரம் வெளியான துணிவுட் ட்ரெய்லர், ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது. படம் முழுக்க அஜித்தின் ஆக்ஷன் ட்ரீட் தான் என்பதை ட்ரெய்லரில் பார்க்க முடிகிறது.

அடுத்து ஏகே 62 ஷூட்டிங்
துணிவு நிச்சயம் பாக்ஸ் ஆபிஸில் வசூல் சாதனை படைக்கும் என சொல்லப்படுகிறது இதனைத் தொடர்ந்து அஜித் தனது அடுத்த படத்திற்காக ரெடியாகி வருகிறார். லைகா தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கும் இது அஜித்தின் 62வது படமாக உருவாகிறது. தற்போதைக்கு 'ஏகே 62' என டைட்டில் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங், பொங்கலுக்குப் பிறகு தொடங்கும் எனக் கூறப்படுகிறது. போடா போடி, நானும் ரவுடி தான், காத்துவாக்குல ரெண்டு காதல் படங்கள் மூலம் கவனம் ஈர்த்த விக்னேஷ் சிவன் ஏகே 62 படத்தை இயக்கவுள்ளார்.

வில்லனாகும் அரவிந்த் சாமி?
ஏகே 62 படத்தில் அஜித்துடன் நடிக்கும் நடிகர்கள், நடிகைகள் பற்றிய அப்டேட் இன்னும் அபிஸியலாக வெளியாகவில்லை. ஆனால் அஜித் ஜோடியாக திரிஷாவும், காமெடி கேரக்டரில் ஜிபி முத்துவும் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகியிருந்தன. அதேபோல் நடிகர் தனுஷ் ஒரு முக்கியமான கேமியோ ரோலில் நடிக்கலாம் என செய்திகள் வெளியாகின. தனுஷுக்கு போலீஸ் கேரக்டர் அல்லது அஜித்து வில்லன் என சொல்லப்பட்டது. இந்த சூழலில் தான் ஏகே 62 படத்தில் அரவிந்த் சாமி வில்லனாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புது ஹீரோயின் லிஸ்ட்
இதனால் ஏகே 62 படத்தில் தனுஷ் நடிப்பாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். அதேபோல், திரிஷா தான் ஹீரோயின் என்ற பேச்சுகள் அடிப்பட்டன. ஆனால், தற்போது திரிஷாவுக்கு பதிலாக காஜல் அகர்வால் அஜித்துக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே இந்தக் கூட்டணி விவேகம் படத்தில் நடித்திருந்தனர். இந்தியன் 2 படத்தில் கமலுடன் நடித்து வரும் காஜல் அகர்வாலுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்ததால் இனிமேல் நடிப்பது சந்தேகம் தான் செய்திகள் வெளியாகின. ஆனால் அஜித்தின் ஏகே 62 படத்தில் அவர் இணையவுள்ளதாக வரும் செய்திகள், காஜல் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்துள்ளது. துணிவு ரிலீஸானது உடனடியாக ஏகே 62 அப்டேட்கள் வெளியாகும் என்றும், படப்பிடிப்பும் உடனே தொடங்கப்படும் எனவும் உறுதியாக சொல்லப்படுகிறது.


Click it and Unblock the Notifications











