அவர் கூட வேண்டாம்.. வலிமை படத்தில் நடிக்க மறுத்தாரா அரவிந்த் சாமி?

Recommended Video

இரட்டை வேடத்தில் கலக்கும் தல அஜித் | Filmibeat tamil

சென்னை: நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய எச்.வினோத் இயக்கத்தில் அஜித் மீண்டும் இணைந்துள்ள படம் வலிமை.

வரும் டிசம்பர் மாதத்தில் வலிமை படத்தின் ஷூட்டிங் தொடங்கப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வலிமை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமி நடிக்க அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், ஆனால், அந்த வாய்ப்பை அவர் ஏற்கவில்லை என்றும் கோலிவுட்டில் பரவலாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.

இதுவரை இல்லை

இதுவரை இல்லை

நடிகர் அஜித் மற்றும் அரவிந்த் சாமி இணைந்து இதுவரை ஒரு படத்தில் கூட நடித்தது இல்லை. ஆரம்பத்தில் இருந்தே அஜித் மற்றும் அரவிந்த் சாமி பல படங்களில் இணையப்போவதாக தகவல்கள் வெளியாவதும், பின்னர் அந்த கூட்டணி இடம்பெறாததும் வாடிக்கையாகி வருகிறது. மங்காத்தா படத்தில் கூட அர்ஜுன் கதாபாத்திரத்தில் நடிக்க அரவிந்த் சாமியை தான் முதலில் அணுகியதாகவும் அப்போது வதந்திகள் பரவின.

வலிமை

வலிமை

போனி கபூர் தயாரிப்பில் நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து மீண்டும் அஜித் நடிக்கும் படம் வலிமை. இந்த படத்தையும் எச். வினோத் தான் இயக்கவுள்ளார். சமீபத்தில், அஜித்தின் வித்தியாசமான கெட்டப் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. என்னை அறிந்தால் படத்திற்கு பிறகு மீண்டும் அஜித் போலீசாக இந்த படத்தில் நடிக்கவுள்ளார்.

நாயகி யார்?

நாயகி யார்?

இந்த ஆண்டு பொங்கலுக்கு வெளியான அஜித்தின் விஸ்வாசம் திரைப்படத்தில் நயன்தாரா நாயகியாக அசத்தியிருந்தார். சமீபத்தில் விக்னேஷ் சிவனுடன் தனது பிறந்த நாளை அமெரிக்காவில் கொண்டாடிய நயன்தாரா, தயாரிப்பாளர் போனிகபூருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகின. வலிமை படத்தில் நயன்தாரா தான் மீண்டும் ஜோடியாக நடிக்க உள்ளார் என்ற தகவலும் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

ஏன் மறுத்தார்?

ஏன் மறுத்தார்?

அஜித்தின் வலிமை படத்தில் அரவிந்த் சாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாகவும், அவர் அதனை மறுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஏ.எல். விஜய் இயக்கத்தில், தலைவி படத்தில் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் நடித்து வரும் அரவிந்த் சாமி, தற்போது வேறு எந்த புதிய படத்திலும் ஒப்பந்தம் செய்யவில்லை என்றும் அதன் காரணமாக அஜித் படத்தை தவிர்த்திருக்கலாம் என்றும் கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X