சித்தார்த் அபிமன்யூவை தூக்கி சாப்பிடுமா இந்த தாவூத் கதாபாத்திரம்? அரவிந்த் சாமியின் ரெண்டகம் டீசர்!
சென்னை: சினிமா துறையில் பைலிங்குவல் படம், பான் இந்தியா படங்கள் தற்போது ஃபேஷன் ஆகி விட்டன.
குறுகிய வட்டத்தில் இருந்து வணிக ரீதியாக சினிமா பிசினஸை விரிவுப்படுத்த இது போன்ற முன்னெடுப்புகளை தயாரிப்பு நிறுவனம் மற்றும் நடிகர்கள் எடுத்து வருகின்றனர்.
பிரபல மலையாள நடிகர் குஞ்சாக்கோ போபன் நடிப்பில் மலையாளம் மற்றும் தமிழ் படமாக உருவாகி உள்ள ரெண்டகம் படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. அதில், நடிகர் அரவிந்த் சாமி நெகட்டிவ் கதாபாத்திரத்தில் தெறிக்கவிட்டுள்ளார். மேலும், பிகில் வில்லன் ஜாக்கி ஷெராஃப் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ரெண்டகம் டீசர்
இயக்குநர் ஃபெலினின் இயக்கத்தில் குஞ்சாக்கோ போபன், அரவிந்த் சாமி, ஜாக்கி ஷெராஃப், ஈஷா ரெப்பா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள படம் தான் ரெண்டகம். மலையாள நடிகரான குஞ்சாக்கோ போபனின் முதல் தமிழ் படம் தான் ரெண்டகம் என்பது குறிப்பிடத்தக்கது. பக்கா கேங்ஸ்டர் படமாக இது உருவாகி உள்ளது டீசரை பார்த்தாலே தெரிகிறது.

அடுத்த சித்தார்த் அபிமன்யூவா
கடல், தனி ஒருவன், போகன், தலைவி என வரிசை கட்டி குணசித்ர கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார் நடிகர் அரவிந்த் சாமி. வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் மனுஷன் பிச்சி உதறிவிடுகிறார். தனி ஒருவன் படத்தில் சித்தார்த் அபிமன்யூவாக நடித்து மிரட்டிய அரவிந்த் சாமி ரெண்டகம் படத்தில் தாவூத் ஆக மிரட்ட உள்ளார்.

மம்மி பட ஹீரோவா
மம்மி படத்தின் ஹீரோ பிரெண்டன் ஃபிரேஸர் போல இரண்டு கைகளிலும் துப்பாக்கிகளை ஏந்திக் கொண்டு சுட்டுக் கொண்டே வரும் சீன் எல்லாம் செம வெறித்தனமாக இருக்கிறது. படத்தில் குஞ்சாக்கோ போபன் ஹீரோவா அல்லது அரவிந்த் சாமி ஹீரோவா என்பதே தெரியவில்லை என ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.

ஆர்யா தயாரிப்பில்
மலையாளத்தில் Ottu எனும் பெயரில் இந்த படம் வெளியாகிறது. டோவினோ தாமஸின் தீவண்டி படத்தை இயக்கிய ஃபெலினி இயக்கும் இந்த படத்தை நடிகர் ஆர்யாவின் தி ஷோ பீப்பள் தயாரிப்பு நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











