இந்தியில் நடிக்கும் அரவிந்த சாமி

By Mayura Akilan

ரோஜா ஹீரோ அரவிந்த சாமி இந்திப் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பீஜே நம்பியாரின் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளாராம்.

90களில் இளம் கதாநாயகனாக அறிமுகமானவர் அரவிந்தசாமி. தளபதியில் மணிரத்னம் படத்தில் கலெக்டராக நடித்து பிரபலமானவர். பின்னர் ரோஜா படத்தில் அரவிந்த சாமியை கதாநாயகனாக்கினார்.

பள்ளி, கல்லூரி மாணவிகள் மத்தியிலும், இளம் பெண்கள் மத்தியிலும் கனவு நாயகனாக வலம் வந்த அரவிந்த சாமி சில படங்களில் மட்டுமே நடித்துவிட்டு பிஸினசை கவனிக்கப் போய்விட்டார்.

மணிரத்னம் பேவரைட்

மணிரத்னம் பேவரைட்

தளபதி, ரோஜா, மும்பை என மணிரத்னம் படங்களில் அதிகம் நடித்த அரவிந்தசாமி, பிற இயக்குநர்கள் இயக்கிய என் சுவாசக்காற்றே, தாலாட்டு போன்ற 18 படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாது மலையாளம், இந்தி படங்களிலும் நடித்துள்ள அரவிந்தசாமி மணிரத்தினத்தின் அலைபாயுதே படத்தில் கடைசியாக நடித்தார்.

மகேந்திரன் இயக்கத்தில்

மகேந்திரன் இயக்கத்தில்

பிரபல இயக்குநர் மகேந்திரன் இயக்கத்தில் சாசனம் படத்தில் 2006ம் ஆண்டு அவர் கடைசியாக நடித்தார். பின்னர் திரை உலகை விட்டு ஒதுங்கிவிட்டார்.

கடல் படத்தில்

கடல் படத்தில்

நீண்ட வருடங்களுக்குப் பின்னர் கடல் படத்தில் மீண்டும் மணிரத்னம் மூலம் திரை உலகில் நுழைந்துள்ளார். இதற்குப்பின்னர் அவருக்கு தெலுங்கு, இந்திப் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

பீஜே நம்பியார் இயக்கத்தில்

பீஜே நம்பியார் இயக்கத்தில்

மணிரத்தினத்தின் உதவியாளரும், டேவிட் பட இயக்குநருமான பீஜே நம்பியார் இயக்கும் இந்திப்படத்தில் இப்போது நடிக்க உள்ளார் அரவிந்தசாமி. இவர் ஏற்கனவே பிரியதர்சன் இயக்கத்தில் ஜூகிசாவ்லா உடன் இந்திப்படத்தில் நடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X