Don't Miss!
- Sports 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அது இந்த குரூப்பில்ல.. வேற குரூப்.. பாலாஜிக்கு விபூதியடித்து உண்மையை ரகசியமாக ஒப்புக்கொண்ட ராஜமாதா!
சென்னை: பிக்பாஸ் வீட்டில் குரூப் இருக்கு என்பதை பாலாஜியிடம் ரகசியமாக ஒப்புக்கொண்டார் அர்ச்சனா.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்று பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்றன. ரேங்க் டாஸ்க்கில் முதல் மூன்று இடங்களை பிடிக்க கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது.
சனம் ஷெட்டியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தால் பாலாஜி செருப்பை கழட்டி தன்னைத்தானே அடித்துக் கொண்டார்.
ஷிவானியை அணைத்தப்படி
இந்நிலையில் நேற்றைய எபிசோடில் ரேங்க் டாஸ்க்குக்கு பிறகு பாலாஜியின் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் காட்டப்பட்டன. அப்போது கார்டன் ஏரியாவில் ஷிவானி தோளில் கையை போட்டு அணைத்தப்படி நடந்து கொண்டிருந்தார் பாலாஜி.
உடனே அழித்த பாலா
அப்போது அங்கு வந்த அர்ச்சானா பாலாஜிக்கு விபூதி வைத்துவிட்டார். கையோடு அவரை கட்டியணைத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அர்ச்சனா கட்டியணைத்த கேப்பில் நெற்றில் வைத்துவிட்ட விபூதியை அழித்தார் பாலாஜி.
ஏன் செருப்பால அடிச்சுக்கிட்ட?
தான் கட்டிப்பிடித்ததால் இப்போவாது பாலாஜியை விட்டு விலகுமாறு ஷிவானியிடம் கூறினார் அர்ச்சனா. இதனை தொடர்ந்து பாலாஜியைவிட்டு சற்று விலகிச் சென்றார். அப்போது பேசிய அர்ச்சனா, என்ன பண்ற நீ? ஏன் அடிச்சுக்கிட்ட? என்று சனம் விவாகரத்தை பேசினார்.
உன்னை வீக்காக்க முடியாது
அதற்கு பதில் சொன்ன பாலாஜி எனக்கு கோவம் வந்துடுச்சு அதை தூண்டி விடுற மாதிரியே பண்ணுச்சு, அதான் அடிச்சுக்கிட்டேன் என்றார். உடனே பதில் சொன்ன அர்ச்சனா, உன்னையெல்லாம் இனிமே வீக்காக்க முடியாது. நீ 60வது நாள்ல இருக்க.
அது வேற குரூப்
அது பண்றது கொஞ்சம் கூட நியாயமே இல்ல. அதுக்கு ஓட்டே போடல. எனக்கு 2வது இடம் தான் வேணும்னு அடம்பிடிச்சு போய் நிக்கிது. அதிலேயும் விஷயம் இருக்கிறது. அது இந்த குரூப் இல்ல. அது வேற குரூப். கண்ண திறந்து பாரு என பாலாஜியிடம் தங்களுக்கும் குரூப் உள்ளது வேறொரு குரூப்பும் உள்ளது என்பதை தன் வாயாலேயே உளறி ஒப்புக்கொண்டுள்ளார் அர்ச்சனா.