பாலாஜி பண்ண வேலை.. பிக் பாஸ் வீட்டில் பிச்சை எடுக்கும் அந்த ரெண்டு பேர்.. வைரலாகும் அன்சீன் புரமோ!
சென்னை: பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய அன்சீன் புரமோ வெளியாகி வைரலாகி வருகிறது.
நேற்றைய நிகழ்ச்சியில் 3வது புரமோ என செங்கல் டாஸ்க்கை போட்ட எடிட்டர் அதனை அன்சீனில் வைத்து விட்டார்.
அன்சீன் என போட்ட ரியோ நிஷா அலப்பறையை நிகழ்ச்சியில் வைத்து விட்டார். இன்றைக்கு எப்படியோ?

அன்சீன் புரமோ
விஜய் மியூசிக்கில் தினமும் அன்சீன் புரமோ வெளியாகி வருகிறது. ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியிலேயே பெரும்பாலான அன்சீன் புரமோ சீன்களை வைத்து விடுகின்றனர். பிக் பாஸ் எடிட்டர் இதை வேண்டுமென்றே பண்ணுகிறாரா? என்கிற சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

லக்சரி பட்ஜெட் காலி
பாலாஜி முருகதாஸ் கிட்ட பிக் பாஸ் சொல்லாத ஒரு கேமை ஆடுகிறேன் என்கிற பெயரில் பாட்டி சொல்லை தட்டாதே டாஸ்க்கை மொத்தமாக சொதப்பிய பாலாஜியால் இந்த வாரத்திற்கான லக்சரி பட்ஜெட் மொத்தமும் காலி என பிக் பாஸ் அதிரடி காட்டி விட்டார். தீபாவளிக்கு தனியா விருந்து வந்துடும்.

மடியேந்தி பிச்சை
தற்போது வெளியாகி உள்ள அன்சீன் புரமோவில், அர்ச்சனா மற்றும் நிஷா லக்சரி பட்ஜெட்டுக்காக பிக் பாஸிடம் மடியேந்தி பிச்சை எடுக்கும் சீன்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த மொக்கை போடும் சீனை அப்படியே அன்சீனிலேயே வைக்கும் படி ரசிகர்கள் தாழ்மையுடன் பிக் பாஸ் எடிட்டருக்கு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

பொய் சொல்லும் நிஷா
சிக்கனை பார்த்து ரெண்டு வாரம் ஆகுது பிக் பாஸ் என நிஷா இஷ்டத்துக்கு பொய் சொல்கிறார். போன வாரம் தான் கமல் சார் பிறந்தநாளை முன்னிட்டு பிரியாணியை பிளேட் பிளேட்டாக முழுங்கி விட்டு, இப்போ இப்படி பொய் சொல்றாரே நிஷா என சில நெட்டிசன்கள் கமெண்ட் அடித்து கலாய்த்து வருகின்றனர்.

மெனு வேற
அர்ச்சனாவும், நிஷாவும் பிக் பாஸிடம் பிச்சை எடுத்து வரும் நிலையில், ஷிவானி, சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன் என வீட்டில் இருக்கும் மற்ற போட்டியாளர்கள் எனக்கு சிக்கன் வேண்டும், எனக்கு புரோட்டீன் வேண்டும் என மெனு கொடுப்பதை பார்க்கவே கடுப்பாக இருக்கிறது. தயவு செஞ்சு கட் பண்ணிடுங்க!


Click it and Unblock the Notifications











