என்னால இருக்க முடியல.. நான் வீட்டுக்கு போகணும்.. மீண்டும் கதறிய அர்ச்சனா.. ஆனாலும் ஆரிய விடலையே!
சென்னை: என்னால் பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியவில்லை என மீண்டும் கதறி அழுதார் அர்ச்சனா.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றை எபிசோடிலும் அதற்கு முந்திய நாள் ரோபோ டாஸ்க்கின் போது நடந்த கதறல் சம்பவங்கள் தொடர்ந்தன.
நேற்று முன்தினம் தனது அப்பாவின் மரணம் கேம்மல்ல என்று கூறி அழுது புலம்பினார் அர்ச்சனா.

காதில் வாங்காத அர்ச்சனா
அதன் தொடர்ச்சியாக நேற்றும் சில சம்பவங்கள் அரங்கேறின. அப்போது பெட்டில் கண்ணீர் விட்டப்படியே அமர்ந்திருந்தார் அர்ச்சனா. அவரிடம் மன்னிப்பு கேட்டு கண்ணீர்விட்டார் நிஷா.
ஆனால் அதையெல்லாம் காதில் வாங்காத அர்ச்சனா, சோமை கட்டியணைத்து கதறினார்.

வீட்டுக்கு போகணும்
என்னால இங்க இருக்க முடியல. தனியால கையாள முடியல. நான் அம்மாக்கிட்ட போகணும். 200 முறை திரும்ப திரும்ப அதையே சொனன்னாங்க. என்ன விளையாட்டு விளையாடுறோம் என்றும் கதறினார் அர்ச்சனா.

ஆரியை பற்றி பேசி
அர்ச்சனாவை ஆறுதல்படுத்திய சோம், என்னையும் ஆரி இதே மாதிரி பேசினார். குட்டுவை பத்தி பேசிக்கொண்டே இருந்தார். அது வீட்டில் இல்லாமல் ஓடிப்போயிருந்தால் என்ன செய்வீங்க என்றெல்லாம் கேட்டார் என்றார்.

கதறிய நிஷா
அதற்கு என்ன ஆச்சு அவருக்கு என்று ஆரி மீது பாய்ந்தார் அர்ச்சனா. ஒருபக்கம் அர்ச்சனாவும் மறுப்பக்கம் நிஷாவும் அழுதுக் கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து பாத் ரூமில் அமர்ந்திருந்தார் அர்ச்சனா. அப்போது அவரது மடியில் படுத்து மன்னிப்பு கேட்டு கதறியழுதார் நிஷா.

சாரி அப்பா.. சாரி அப்பா..
மேலும் உன் மனச உடைச்சுட்டேன் சாரி.. நான் தப்பா பேசல, நான் அப்பாக்கிட்ட சாரி கிட்டேன்.. வெளியே வந்து அழுதேன் என நேற்று நடந்த கதையெல்லாம் அர்ச்சனாவிடம் விளக்கினார் நிஷா. மேலும் கோவம் இருந்தா ஒரு அறைக்கூட அறைஞ்சுடு என்ற அவர்.. சாரி அப்பா சாரி அப்பா கத்தினார். இதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இதெல்லாம் என தலையில் அடித்துக்கொண்டனர்.


Click it and Unblock the Notifications











