twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    குடத்தால் மொத்தி.. முடியை பிடித்து.. என்னா வாய் நிஷா.. அதுக்குமேல அர்ச்சனா.. ரணகளமான பிக்பாஸ் வீடு!

    |

    சென்னை: பிக்பாஸ் வீட்டில் அர்ச்சனாவும் நிஷாவும் போட்ட குழாயடி சண்டை ரசிகர்களை மிரள விட்டது.

    Recommended Video

    கொலுத்தி போட்ட பிக் பாஸ்! இந்த வாரம் வெளியேற போவது யார்?

    பிக்பாஸ் நிகழ்ச்சியில் லக்ஸரி பட்ஜெட் டாஸ்க்காக மணிக்கூண்டு டாஸ்க் கொடுக்கப்பட்டது.

    இதனால் கேஸ் முதல் தண்ணீர் வரை அனைத்துமே நேரப்படி வழங்கப்படுகிறது.

    சனம் ஷெட்டியை அடித்து விளையாடிய பாலாஜி.. இப்படி ஆளை மாத்திக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்!சனம் ஷெட்டியை அடித்து விளையாடிய பாலாஜி.. இப்படி ஆளை மாத்திக்கிட்டே இருந்தா என்ன அர்த்தம்!

    தண்ணீர் பிடிப்பதில் சண்டை

    தண்ணீர் பிடிப்பதில் சண்டை

    அந்த வகையில் நேற்றைய எபிசோடில் லக்ஸரி டாஸ்க்கை முன்னிட்டு தண்ணீர் லாரி மூலம் ஹவுஸ்மெட்ஸ்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

    லபோ திபோ என கத்தி..

    லபோ திபோ என கத்தி..

    நிஜ குழாயடி சண்டையே தோற்கும் அளவுக்கு கன்னாபின்னாவென பேசிக்கொண்டனர் இருவரும். தலையில் அடித்துக்கொண்டும் மார்பில் அடித்துக் கொண்டும் லபோ திபோ என கத்தினர்.

    ஒன் வுமன் ஆர்மி

    ஒன் வுமன் ஆர்மி

    போதா குறைக்கு குடத்தாலும் அர்ச்சனாவை மொத்து மொத்து என மொத்தினார். மேலும் அனைத்து ஹவுஸ்மெட்டுகளிடமும் ஒன் வுமன் ஆர்மியாக நின்று வெளுத்து வாங்கினார்.

    அறிவு இருக்காடா?

    அறிவு இருக்காடா?

    அதோடு விடவில்லை கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துவிட்டு வந்து, மீண்டும் செகண்ட் ரவுண்டில் வச்சு செய்தார். ஆவேசமாக சென்ற நிஷா, எதிரே வந்த சோமிடம் என்னடா 10 குடம் தண்ணி கொடுக்கிறீங்க? அறிவு இருக்காடா உங்களுக்கெல்லாம் என்றார்.

    குடத்தை திருட வந்தியாடி

    குடத்தை திருட வந்தியாடி

    இதனால் அதிர்ச்சி அடைந்த சோம சேகர், என்ன பேசுவது என்றே தெரியாமல் முழித்தார். அப்படியே அர்ச்சனா மீது பாய்ந்தார் நிஷா. வந்துட்டா பாரு சிலுப்பி.. என உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி.. குடம் பிடிக்க வந்தீயா இல்ல குடத்தை திருட வந்தியாடி என அர்ச்சனாவை சண்டைக்கு இழுத்தார்.

    உன் புருஷன..

    உன் புருஷன..

    அப்போது குறுக்கிட்ட அனிதா, எப்போ பாரு சண்டை போடுறா.. இவள இங்கிருந்து காலி பண்ணி பக்கத்து காலணிக்கு அனுப்பனும் என்றார். அதுக்கு அனுப்புவடி அனுப்புவ என்று அர்ச்சனாவிடம் உன் புருஷன வீடு பார்த்து கொடுக்க சொல் என்றார்.

    அர்ச்சனா பர்ஃபாமன்ஸ்

    அர்ச்சனா பர்ஃபாமன்ஸ்

    அதற்கு பதில் சொல்லும் அர்ச்சனா, என் புருஷனுக்கு வேற வேலை இல்லையா உனக்கு வீடு பார்த்து தரனுமா என லோக்கலாக கைகளை தட்டியும் வளைத்தும் அவர் காட்டும் பாடி லாங்குவெஜ் நிஜ குழாயடி சண்டையை தூக்கி விழுங்கும் படி இருந்தது.

    பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

    பெஸ்ட் பர்ஃபாமன்ஸ்

    ஒரு கட்டத்தில் இருவரும் முடியை பிடித்துக்கொண்டு சண்டை போட்டனர். அப்போது மொத்த ஹவுஸ்மேட்டும் சேர்ந்து நிஷாவை ரவுண்டு கட்ட ஓட்டம் பிடித்துவிட்டார். இதனை பார்த்த ரசிகர்கள், இருவரும்தான் இந்த வார பெஸ்ட் பர்ஃபாமன்ஸுக்கு வருவார்கள் போல என்று கூறி வருகின்றனர்.

    English summary
    Archana and Nisha fight in biggboss house is vera level. Their fight looks like real fight.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X