என் புருஷனுக்கு வேற வேலை இல்லையா.. முடியை பிடித்து சண்டை போடும் அர்ச்சனா அன்ட் நிஷா.. ரணகள புரமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது.
Recommended Video
பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய முதல் புரமோவில்
பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து 45 மணிநேரம் டாஸ்க் கொடுக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இதில் பிக்பாஸ் ஹவுஸ்மெட்ஸ் 5 குழுக்களாக பிரிந்து நேரத்தை கணிப்பதாக தெரிந்தது. அந்த புரமோவை பார்த்த ரசிகர்கள், இப்போவாது டாஸ்க் கொடுத்தீர்களே என பிக்பாஸை புகழ்ந்தனர்.

குழாயடி சண்டை
இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரமோ வெளியாகியுள்ளது. அதில் அர்ச்சனாவுக்கும் நிஷாவுக்கும் குடுமிப்பிடி சண்டை நடைபெறுகிறது. தண்ணீர் பிடிப்பதில் நடக்கும் குழாயடி சண்டையாக உள்ளது அந்த சண்டை.

அறிவு இருக்காடா?
அந்த புரமோவில் எடுத்த எடுப்பில் சோம சேகருடன் மல்லுக்கு நிற்கிறார் நிஷா. ஆவேசமாக வரும் நிஷா, என்னடா 10 குடம் தண்ணி கொடுக்கறீங்க? அறிவு இருக்காடா உங்களுக்கெல்லாம் என்று கேட்கிறார்.

வந்துட்டா பாரு சிலுப்பி
இதனால் அதிர்ச்சி அடைந்த சோம சேகர், என்ன பேசுவது என்றே தெரியாமல் விழி பிதுங்கி போயுள்ளார். அப்படியே அர்ச்சனா மீது பாய்கிறார் நிஷா. வந்துட்டா பாரு சிலுப்பி..என உடம்பை ஒரு குலுக்கு குலுக்கி.. குடம் பிடிக்க வந்தீயா இல்ல குடத்தை திருட வந்தீயாடி என்று அர்ச்சனாவை சண்டைக்கு இழுக்கிறார் நிஷா.

வேற வேலை இல்லையா?
நிஷா பேசும் போது அனிதாவும் குறுக்கிட அவரையும் ஏறிவிடுகிறார். தொடர்ந்து பேசும் அர்ச்சனா, என் புருஷனுக்கு வேற வேலை இல்லையா உனக்கு வேலை செஞ்சு தரனுமா என லோக்கலா இறங்கி செய்கிறார். கைகளை தட்டியும் வளைத்தும் அவர் காட்டும் பாடி லாங்குவெஜ் வேற லெவலில் உள்ளது.

இருவரும் முடியை பிடித்து
ஒரு கட்டத்தில் இருவரும் முடியை பிடித்துக்கொண்டு சண்டை போடுகின்றனர். அதை பார்க்கவே படு பயங்கரமாக உள்ளது. காமெடி சண்டை என்றாலும் நிஷாவும் அர்ச்சனாவும் பர்ஃபாமன்ஸில் பட்டைய கிளப்பியுள்ளனர்.

மிரண்டு ஓட்டம்
அவர்களை மற்ற ஹவுஸ்மெட்ஸ் சமாதானப் படுத்துகின்றனர். பின்னர் அனிதாவும் ஷிவானியும் நிஷாவை ரேக் செய்ய, நான் சும்மா ஃபன்னுக்கு செய்தேன் என மிரண்டு ஓடுகிறார். இப்படியாக உள்ளது இரண்டாவது புரமோ.


Click it and Unblock the Notifications











